நாகூர் ஹனிபா

Vinkmag ad

அப்போது எனக்கு 14 வயது. எங்கள் ஊர்

கீழச்சிறுபோது

பள்ளிவாசல் ரம்ஜான் விழாவில் திரு.நாகூர் ஹனிபா அவர்கள் கச்சேரி…

நெஞ்சை அள்ளும்
நிறைய பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தார்…

இடையில் ஜமாத் தலைவர் அவர்கள்
நமது மக்களை மகிழ்வித்த திரு ஹனிபா அவர்களுக்கு பள்ளிவாசல் சார்பில் 1000 வழங்க படும் என்றார் ( அப்போது அது பெரிய தொகை) ..

சிரித்து கொண்டே ஏற்றுக் கொண்ட திரு ஹனிபா அவர்கள்
” நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை” என்று இந்தப் பாடலை ஆரம்பித்தார் பாருங்கள் கைதட்டல் அடங்க வெகு நேரமானது….

இன்றளவும் எனது மனதை வருடும் பாடல்களில் இதுவும் ஒன்று…..

மறக்கும் மனித இயல்பில்

மறந்திடாமல் வைத்தாய்

இனி இறக்கும் போதும்

இந்த பேர் நிலைக்கும்

வாழ்வு தந்தாய்…

என்ற வரிகள்

நிச்சயமாக

திரு.நாகூர் ஹனிபா அவர்களுக்கு
பொருந்தும்.

 

பா.திருநாகலிங்க பாண்டியன்

கீழச்சிறுபோது.

News

Read Previous

தண்ணீருக்கும் குளிர்பானங்களுக்கும் தேவை தரநிர்ணயம்

Read Next

கார்ல் மார்க்ஸ் 200

Leave a Reply

Your email address will not be published.