கருப்பு கல் எனும் ஹஜருல் அஸ்வத்

Vinkmag ad

“கருப்பு கல் எனும் ஹஜருல் அஸ்வத்”

இந்த பூமிக்கு சொந்தம் இல்லாமல், சொர்க்கத்தில் இருந்து வந்த ஒரு கல்.
சவூதி, மக்காவில் உள்ள கஃபதுல்லாவின் கிழக்கு மூலையில் இந்த கல் பதிக்க பட்டுள்ள. புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் ஏழுமுறை வலம் வரும் போது இந்த கல்லை முத்தமிடுவது வழக்கம்.
இன்றையதினத்தில் கஃபாவை சுற்றி வர கோடு போட்டுவிட்டார்கள். அந்தந்த வளையத்திற்குள், இடைவெளிவிட்டு சுற்றிவரும் நிலையில் இருப்பவர்கள் எப்படி ஹஜருல் அஸ்வத் கல்லை நெருங்க இயலும்?
ஹஜ் கிரிகையின் போது, கட்டாயமாக அந்த கல்லை தொட வேண்டுமா? கட்டாயமாக முத்தமிட வேண்டுமா? என்றால்..
இல்லை!
உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி” நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.
இந்த வரலாற்றுச் செய்தி ஆதாரப்பூர்வமான நூல்களில் இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு வயது 35 இருக்கும். நபித்துவத்திற்கு முந்தய கால கட்டம்.
கஃபாபில் பராமரிப்பு வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்கள், அந்த கல்லை எடுத்து வெளியே வைத்து இருந்தார்கள். பராமரிப்பு வேலைகள் முடிவடைந்த்ததும் யார் அந்த கல்லை தூக்கி அது இருந்த இடத்தில் வைப்பது என்பதில் அப்போது இருந்த பல கோத்திரத்தாரிடம் பிரட்சினை ஏற்பட்டது. நாளை காலை முதலில் யார் வருகிறாரோ அந்த நபரிடம் இந்த பிரட்சினையை முன் வைப்போம் என்று அவர்களிடம் ஒரு முடிவு ஏற்பட்டது.
அடுத்த நாள் முதல் நபராக நபி(ஸல்) அவர்கள் வர அவர்களிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்க பட்டது.
ஒரு விரிப்பு கொண்டு வந்து, அதன் நடுவில் அந்த கல்லை வைத்து, அந்த விரிப்பின் நான்கு முனைகளையும் நான்கு கோத்திரத்தாரில் ஒருவர் பிடித்து தூக்க, தனது திருக்கரங்களால் அந்த கல்லை கஃபாவின் கிழக்கு மூலையில் அந்த கல்லை பதித்தார்கள். பிரட்சினை முடிவுக்கு வந்தது.
கிபி 683ல், அந்த கல் சிலரால் சேதப்படுத்தபட்டு துண்டுகள் ஆனது. பின்பு வெள்ளி நாரை கொண்டு அப்துல்லாஹ் இபைனு ஜுபர் அவர்கள் இணைத்தார்கள்.
கிபி 930ல் அந்த கல் திருடப்பட்டது. 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் கொண்டு வரப்பட்டது. அந்த கல் மேலும் மேலும் சேதமடைந்து 7 துண்டுகளாயின.
அதை திருடியவர் கை புண்ணாகி புழுபூத்ததன் காரணமாகவே அவர் திருப்பி ஒப்படைதார்.
இது சுவனத்து கல். பாலைவிட வெண்மையாக இருந்த்தது. பாவக்கரங்கள் பட்டு கருப்பு கல் ஆனது.
பிற்காலத்தில் பல ஆராய்ச்சியாளர்கள் அந்த கல் குறித்து பல கருத்துகளை முன் வைத்தார்கள்.
இது ஒரு விண்கல்!
எரிமலை பாறையின் துகள்!
இரத்தினக்கல்!
தண்ணீரில் மிதக்க கூடியது!
6000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்த கல்!
என்று பலர் பல ஆராய்ச்சிகளை வெளியிட்டார்கள்.
இஸ்லாமியர்களின் நம்பிக்கைபடி அது சொர்கத்துகல். இறைவனால் கொண்டுவரப்பட்டு அவன் எழுப்பிய ஆலையத்தில் வைக்கபட்டது
அவ்வளவுதான்.
அதை யாரும் வணங்க மாட்டார்கள். அதற்கு சக்திகள் உண்டு என்று நம்பமாட்டார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் திரக்கரம் பட்ட கல் என்பதால் அதனை எப்படியாவது தொடவேண்டும். முத்தமிட வேண்டும் என்ற பேராவலின் காரணமே தவிர வேறொன்றும் இல்லை.

News

Read Previous

பாம்பன் ஜமாஅத் தலைவர் என்.அய்யூப்கான் மரணம்

Read Next

ஈதுல் அளுஹா

Leave a Reply

Your email address will not be published.