இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைக்கான பரிசு 2014

Vinkmag ad

மாசிலா விஜயா பரிசு

            தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டிலிருந்து தமிழகத்தை சார்ந்த தென்றல் குடும்பத்தினர் “மாசிலா – விஜயா பரிசு” என்ற ஒன்றை  அறிவிப்பதில்  பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.

இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ரூபாய் 50,000 என்ற முறையில் கீழ்க்கண்ட ஒவ்வொரு பணிக்கும் பரிசு வழங்கப்படும்.

 

1.தமிழ் இலக்கியப் பரிசு                            :ரூ 50,000

2.அறிவியல் & தொழில்நுட்பப் பரிசு       :ரூ 50,000

3.சமூக சேவைப்  பரிசு                               :ரூ 50,000

ஒவ்வொரு துறையிலும் சிறந்த தொண்டாற்றியவர்களைத் முறையாகத் தேர்வு செய்து அவர்களைப் பெருமைப் படுத்துவதும், உலகுக்கு முன்னிலைப் படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கம்.

இவ்வாறு செய்வதால், மனித இன மேம்பாட்டுக்கான மேற்கண்ட ஒவ்வொரு துறையிலும், மேலும் மேலும் சிறந்த சாதனைகள் மிளிரும் என்றும், அதற்கு இப்பரிசு ஒரு சிறு தூண்டு கோலாய் அமையும் என்று நம்புகிறோம்.

  1. தமிழ் இலக்கியப் பரிசு:

 

தமிழில் விழுமிய புத்தகம் எழுதியவர்கள் யாரேயாயினும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களை இப்பரிசு தேடிச் சென்றடைய வேண்டும். இந்த படைப்பு கதையாகவோ, கட்டுரையாகவோ, கவிதையாகவோ அல்லது வேறெந்த வடிவிலோ இருக்கலாம். படைப்பிலக்கியமாகவோ (creative work), கலை இலக்கியமாகவோ (artistic work), விரிவிலக்கியமாகவோ (expository work) இருக்கலாம். மனித சிந்தனைக்கு புதிய பரிமாணமும், புதிய பரிணாமமும் சேர்க்கும் தமிழ்ப் படைப்பாய் இருத்தல் வேண்டும். (2011 ஜூலை பின்னர் வெளியிடப்பட்ட புத்தகம்/ங்கள்  மட்டுமே  ஏற்கப்படும்)

 

  1. அறிவியல் & தொழில் நுட்பப் பரிசு:

 

மனித சிந்தனையையும் வாழ்க்கைமுறையையும் அறிவியலும் தொழில்நுட்பமும் பெரிதும் சீர்திருத்திவிட்டன. இத்துறையில் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை (Research publication in high impact factor journal, with high citation), கண்டுபிடிப்பு (discovery), அல்லது கருவி (invention) செய்த விஞ்ஞானிகளை, இப்பரிசு தேடிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாடு, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள்,  பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், மற்றும் தனியார் யாரேயாயினும் முன்வருக. தகுதிக்கும் தரத்திற்குமே முதலிடம்.

 

  1. 3.    மூக சேவைப் பரிசு:

 

தன் நலம் குறைத்து, மனித நலம் வேண்டி கருணையோடும் கண்ணோட்டத்தோடும் தனிப்பட்ட முறையிலும் நிறுவனமாயும் பலர் சமூக சேவை செய்து வருகிறார்கள். மண்பயனுற, மனிதவளம் மேம்பட சிறிதாகவோ பெரிதாகவோ சேவை செய்து வரும்  மனிதநேய மணிகளை இப்பரிசு தேடிக் கொண்டிருக்கிறது. சமூக சேவை எந்த வடிவில் இருப்பினும் தமிழக, புதுச்சேரி மாநிலங்களுக்குள்  இருத்தல் வேண்டும்.

மேலே  குறிப்பிடப்பட்டுள்ள  பரிசுக்குத்  தகுதியும்  தரமும் உள்ளவர்களை தேட அனைத்து அன்பர்களும் உதவ வேண்டுகிறோம். அவர்கள் பெயரும், முகவரியும், தகுதிபற்றிய  தெளிவான விவரங்களும் கீழ்க்கண்ட  முகவரிக்கு  ஜூன் 30ம் தேதி 2014க்குள் அனுப்பப்பெறல் வேண்டும். ஒவ்வொரு பரிசுக்கும் 4 படிவங்கள் வேண்டும். (eg: for literature award 4 copies of published books, 4 copies of write – up in REG POST ). அனுப்பவேண்டிய முகவரி,

திரு. செல்லத்துரை M.C.A,

Ph #   + 8144603970            G/O V. நீலகண்டன்,

சன்னதி தெரு,

திருப்பைஞ்ஞீலி, 620 100   திருச்சி மாவட்டம்.

திறமும், கண்ணியமும் செறிந்த நடுவர்களால் பரிசுக்குத் தகுதியானவர்களைத் அறுதியாகத் தேர்வு செய்யப்படும்.

பரிசு வழங்கப்படும் நாள்: ஆகஸ்ட் 10, 2014

இடம்: திருப்பைஞ்ஞீலி

(திருச்சியடுத்த ஊர்)

மேலும் விவரங்களுக்கு,

masila123@gmail.com

www.ulagha-tamil-sangam.com

 

 

News

Read Previous

தமிழ் வரி தட்டச்சிடத் தமிழாக உச்சரிக்கும் கருவி

Read Next

சேமிப்பு எனும் தற்பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published.