இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்

Vinkmag ad

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்

🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது நாடு விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த சுமார் 95,300 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945 பேர் முஸ்லிம்கள்.

🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய கீதம் தற்போதுள்ள “ஜன கண மன” அல்ல, அல்லாமா இக்பால் அவர்கள் இயற்றிய, “ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” என்ற பாடல் தான்.

🇮🇳. ஷேகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் மால்டா சிறையில் இருக்கும் போது, ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவர்களின் இடுப்பில் சூடு போடுவார்கள். அதனால் அவர்களின் இடுப்பில் சதையே இல்லை.

🇮🇳. காந்திக்கு “மகாத்மா” என்று பெயர் சூட்டியதே அப்துல் பாரீ ஃபரங்கி மஹல்லி (ரஹ்) அவர்கள் தான்.

🇮🇳. 40 உலமாக்கள் நிர்வாண நிலையில் நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, 14,000 ஆலிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.

🇮🇳. பகதூர் ஷா ஜாஃபர் மன்னர் அவர்களின் இரு மகன்களின் தலைகளை வெட்டி துணி மூடியவாறு தட்டில் வைத்து அவர்களிடத்திலேயே கொடுக்கப்பட்டது.

🇮🇳. தேசிய கொடியை வடிவமைத்தவர், “சுரையா தியாப்ஜி” என்ற இஸ்லாமிய பெண்மணியாவார்.

🇮🇳. வா. உ. சிதம்பரனார் அவர்களுக்கு சுதேசி கப்பல் வாங்க ஹாஜி ஃபக்கிர் முஹம்மது சேட் என்பவரே 80 % சதவீத பணம் தானமாக வழங்கினார்.

🇮🇳. இந்தியாவின் பாரம்பரிய ஆடையான கதர் ஆடையை முதன்முதலில் இராட்டையில் திரித்து, ஆடையாய் நெய்து தயாரித்து காந்தி அவர்களுக்கு போர்த்தி அந்த ஆடைக்கு “கதர் ஆடை” என்று பெயர் வைத்தவர் மௌலானா முஹம்மது அலி அவர்களின் தாயார் ஆபாதி பானு சாஹிபா அவர்கள்.

தகவல் : கொடிநகரான்.

News

Read Previous

கோவை அருகே மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி

Read Next

சிங்கப்பூரில் முதுவை பிரமுகருக்கு விருது

Leave a Reply

Your email address will not be published.