துபாயில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

Vinkmag ad

WhatsApp Image 2019-05-25 at 17.09.38 (2)துபாயில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய்: துபாயில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 24/05/2019 வெள்ளிக் கிழமை மாலை தேரா, முத்தினா ரோடு, கராச்சி தர்பார் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக இறைவசனங்களுடன் ஆரம்பம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஹாஜி P.M. முஹம்மது சிராஜுதீன் கெளரவ ஆலோசகர் ஆரம்ப கால கூத்தாநல்லூர் அமைப்பு துவக்கம் பற்றியும், ஒற்றுமையின் அவசத்தியதை பற்றியும், குறிப்பாக இளைஞர்கள் ஒன்று பட்டு செயல்பட அழைப்பு விடுத்தார்கள். அவரை தொடர்ந்து கூத்தாநல்லூர் அமைப்பின் தலைவர் K.M. நூருல் அமீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அடுத்ததாக அமைப்பின் செயலாளர் N.M.E. தாஹிர் அலி அவர்கள் தனது உரையில் 25 ஆண்டுகால அமைப்பின் சேவையை தெளிவாக விவரித்தார் அத்துடன் வருகை தந்த அனைவருக்கும் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்பின்  மூத்த உறுப்பினர்கள் O.M. முஹம்மது,  P.A. ரபீக் முஹம்மது, H. அப்துல் பத்தாஹ், அல்வானி அக்பர் அலி, K.S. அமீர்ஹம்ஜா மற்றும் அமைப்பின் அனைத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாக ஆண்கள் , பெண்கள், குழந்தைகள் உட்பட  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இறுதியாக துஆவுடன் இந்நிகழ்ச்சி இரவு நேர விருந்துடன், சினோ ஸ்டார் ஏசியா குரூப் (Hong Kong) அன்பளிப்புடன் இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைஷேசன் நண்பர்கள்  வெகுசிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பிற அமைப்பின் நிர்வாகிகள், பத்திரிக்கை நண்பர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News

Read Previous

வாழ்த்துக்கள்

Read Next

பட்டாம்பூச்சிகள்

Leave a Reply

Your email address will not be published.