பட்டாம்பூச்சிகள்

Vinkmag ad
பட்டாம்பூச்சிகள்
===============================================ருத்ரா
பட்டாம்பூச்சிகள்
இரண்டு
கலந்து உறவாடியதை
கவிதை ஆக்கினேன்.
மரகதப் புல்விரிப்பை
மனத்துள் போர்த்திக்கொண்டேன்.
தர்பூசணி பழத்துண்டுகள்
விதைகளின் கண்களால்
தாகமெடுத்த மக்களை
உறுத்து விழித்தன.
இதே மாமூல் தாகம் தானா?
இதையும் மீறிய தாகங்கள்
இந்த மண்ணின் மீது இல்லையா
என்று அவை
கேட்காமல் கேட்டன.
வெயில் வெள்ளமெடுத்துப்
பெருகியதில்
மனிதர்களின் உடல்
அணைக்கட்டுகளில்
வியர்வையின் நீர்த்தேக்கம்
உயரம் மீறின.
தாகம் தீர்க்க வழியில்லை.
ஏரிகளின் வறண்ட படுகைகளில்
கானல் நீர் ஆடி அசைந்தன.
அந்த நீருக்குள்ளும்
அரசியலின் டி.எம்.சி
இத்தனை கன அடிகள் என்று
டிவிக்களின் அந்த‌
நான்குபேர்கள் பேசித்தீர்த்தனர்.
அடேய் கவிஞா!
சொற்களில் பிரியாணி தின்றது போதும்.
கொட்டிக்கவிழ்த்தாயிற்று ஓட்டுகளை.
கவிழ்ந்து கிடப்பது
வானத்தோடு சேர்ந்த விடியல்கள்.
இருட்டு வர்ணத்தில்
தேசக்கொடி பறந்ததில்
இமயங்கள் கூட‌
தலைகுப்புறக் கிடக்கின்றன.
இடறி வீழ்ந்திடாதீர்.
வெள்ளைக்காரர்கள் போயினர்.
வெள்ளைக்காரர்கள் வந்தனர்.
அதென்ன சமூக நீதி?
அதெல்லாம்
“புருஷ சூக்தம்” பார்த்துக்கொள்ளும்.
சாதிகளின் வெள்ளை வர்க்கம்
திரை போட்டு விட்டது.
திரை விலக்கி
ஏதேனும் கேட்டுவிட்டால்
“யார் அங்கே “ஆண்டி இந்தியன்”?
என்று சத்தம் போட்டது.
எழுச்சியுற்ற எழுத்துக்களை
தூக்கிச் சுமந்து கொண்டு
கவிஞன்
பேனா தேடினான்.
காகிதம் தேடினான்.
பயனில்லை.
மயானங்களின் ஆந்தைகள்
“மோக்ஷ கானம் ” பாடின.

News

Read Previous

துபாயில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

Read Next

புனித ரமலான் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *