திருச்செந்தூர் தாசில்தார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக

Vinkmag ad
தேதி : 23 ஜூலை 2020
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு
சென்னை
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.
கொரோனா பாதிப்பின் காரணமாக வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் விமான சேவை பாதிப்பின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசு வந்தே பாரத் சிறப்பு விமானம் மூலம் இந்தியர்களை அழைத்து வரும் பணியினை மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்த சேவையின் மூலம் போதிய அளவு விமானங்கள் தமிழகத்துக்கு இல்லாமல் இருக்கிறது.
இதனால் அபுதாபி, துபாய் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் அமீரக காயிதேமில்லத் பேரவை  சார்டர்ட் எனப்படும் சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து தமிழர்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியில் இனம், மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் இல்லாமல் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 14-ஆம் தேதி ராசல் கைமாவில் இருந்து மதுரைக்கு 150-க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் உள்ள வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான  கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த கல்லூரிக்கு பயணிகள் வந்த பின்னர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பொறுப்பு  திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜுக்கு உண்டு.
அந்த பணிகளை செய்யாமல், உதவி செய்பவர்களை உதாசீனப்பட்டுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக கேள்விப்பட்டு மிகவும் வேதனையடைகிறோம். பயணிகளுக்கான மருத்துவ பரிசோதனை முடிவுகளை தெரிவிக்காமல், அவர்களை சொந்த ஊருக்கு செல்லவும் அனுமதிக்க வில்லை.
இந்த பணிகளை முன்னெடுத்து செய்து கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் அபுபக்கரை,  கடையநல்லூர் எம்.எல்.ஏவுக்கு காயல்பட்டணத்தில் என்ன வேலை என்ற தொணியில் பேசியுள்ளார்.
ஒரு பொது நல ஊழியரை கொச்சைப் படுத்தும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது.
வெளிநாடுகளில் வேலையிழந்தும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக சொந்த ஊரு திரும்புவோருக்கு உதவிகள் செய்ய முன் வராமல் அரசு அதிகாரி ஒருவர் மெத்தனமாக இருந்தாலும், அவர்களுக்கு உதவி செய்பவர்களை இழிவு படுத்தும் பணியை தங்களது தலைமையிலான அரசு நிச்சயம் செய்யாது  என நம்புகிறோம்.
எனவே சட்டமன்ற உறுப்பினரை இழிவு படுத்திய திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற இழிவு படுத்தும் செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தடுக்க வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.
இப்படிக்கு
முதுவை ஹிதாயத்
அஞ்சல் பெட்டி எண் 13302
துபாய் – ஐக்கிய அரபு அமீரகம்
+971 50 5196433
MUDUVAI HIDAYATH

DUBAI – UAE
00971 50 51 96 433

 

News

Read Previous

சில கதைகளும் படிப்பினைகளும்

Read Next

காதல் என்னும் கொசுக்கடிகள்

Leave a Reply

Your email address will not be published.