பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

Vinkmag ad

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமான மின் மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சினை களுக்கு அருமருந்து..

* பித்தத்தைப் போக் கும், உடலுக்குத் தென் பூட்டும்,  இதயத்திற்கு நல்லது, மனநோய் களைக் குணமாக்குவதில் உதவும், கல்லீரலுக்கும் ஏற்றது, கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும், சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும், கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும், முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்,

இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும், மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது, பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.

* பப்பாளியிலுள்ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன் என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம் படுத்தவும், கார்பின் இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.

* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப் படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் பட்டினிச் சிகிச்சை மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

* நோய் எதிர்ப்பு (ஆண்டிபயாடிக்) மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். *  பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

*  ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், நினைவாற்றலை அதிகமாக்கவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

*  மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் நாள்தோறும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

* அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

News

Read Previous

முதுகுளத்தூர் அருகே புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

Read Next

முதுகுளத்தூரில் தொடரும் ஆபத்தான பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *