பெரியார்
சிந்தனை
சூரியன்
சிந்திக்கத்தூண்டிய
மாமனிதன்.
மதத்தை
வெறுத்து
மனிதம்
பரப்பினார்.
குடும்பத்தைத்
துறந்து
குடிமைக்கு
முழங்கினார்.
அறிவின்
விதையை
அன்பால்
விதைத்தவர்.
அடக்கு
முறைக்கு
அடங்காமல்
அதிரடி காட்டியவர்.
முதுமையில்
இளமையின்
வேகம்…
மூட
நம்பிக்கையை
எதிர்த்து முழங்கிய
தேகம்.
பெண்களின்
விடுதலையே…
பேரின்பம்
என்றார்.
பெருங்கூட்டத்தை
அறிவால்
வென்றார்.
புராணக்
கதைகளை…
புழுதி என்றார்.
புத்தியைக்
கொண்டு
வாழ்வதே
சிறப்பு என்றார்.
விடுதலையில்
கல்வி
வளர்த்தார்.
வீடு
தோறும்
கருணையை
விதைத்தார்.
இருள் சூழ்ந்து
இன்னல் செய்த
காலத்தில்…
அறிவு
ஒளி கொண்டு
அன்பை போதித்தார்.
வைக்கத்தில்
வாகை சூடி…
வையகத்தில்
நிமிர்ந்து
நின்றார்.
போதையின்
பாதைக்கு
போகாதே
என்றார்.
பொழுதெல்லாம்
அதற்காக
ஆர்ப்பாட்டம்
செய்தார்.
கள்ளுக்கடை
எதிர்ப்பு…
கல்விக்கூடம்
திறப்பு.
முதுமையிலும்
உழைப்பு…
முத்திரை
பதிப்பு.
இதுவே
இவரின் சிறப்பு
அவரே பெரியார்.
அரும்புக்கவி
அன்வர் உசேன்
அஜந்தா டெக்ஸ்டைல்ஸ்
அஜந்தா குட்டீஸ்
ராமநாதபுரம்