கவிதைகள் (All)

படம் பேசும் கவிதை…

படம் பேசும் கவிதை…

கலைந்த
உன் கூந்தல்

கலையாத
வதனம்

பிறை வடிவ
நெற்றி

பிறரை
மயக்கும்
உன் பார்வை.

பாதி மறைத்து
பக்குவமாய்
உறங்கும்
மார்பு

ஊதி
வடித்த உன்
மேனி.

உலகை
வளைக்கும்
உன்னதம் கொண்ட
உடுக்கை
உன் வயிறு.

காட்டாற்று
வெள்ளத்தில்
கடைசியாய்
ஓடி நிற்கும்
வடுக்களாய்
அந்த
மடிப்புக்கள்

மாராப்பை
உதறிய
மடிப்பின்
பிடிப்பில்

மயங்கிய
நிலையில்
உணர்வற்று
நான்
உனக்காக.

அரும்புக்கவி…
அன்வர் உசேன்
அஜந்தா டெக்ஸ்டைல்ஸ்
ராமநாதபுரம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button