உலகம்
இஃப்த்தார் உணவு விநியோகம்

கிரீன் குளோப் அமைப்பு சார்பில், பீஸ் அண்ட் கேர் அமைப்பின் ஒத்துழைப்போடு துபாயில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 நபர்களுக்கு இஃப்த்தார் உணவு விநியோகம் செய்யப்பட்டது.


நிகழ்விற்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தங்கினார். பீஸ் அண்ட் கேர் நிறுவனர் முஹம்மது ரபீக் மற்றும் நிர்வாகிகள் முஹைத்தீன் அப்துல் காதர், அப்துல் ரஹ்மான், ஆசிக் ஆகியோரும் , கிரீன் குளோப் உறுப்பினர்கள் ரசூல், அப்துல் ரஹ்மான், பீர் முஹம்மது, அபூபக்கர், முஹம்மது ரவூப் மற்றும் தன்னார்வளர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.






