புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2026.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2026.
அகிலம் முழுவதும் கடைபிடிக்கும்
ஆங்கிலப்புத்தாண்டே வருக.
அளவற்ற நன்மைகள் , அனைவருக்கும்
அள்ளி அள்ளித் தருக.
புத்தாண்டு முழுவதுமே
புத்தாக்க சிந்தனைகள்
புத்தியில் பெருகட்டும்.
புத்தெழில் மிளிரட்டும்.
புத்தொளி பரவட்டும்.
புது வேகம் பிறக்கட்டும்.
புவன வாழ்வு சிறக்கட்டும்.
கார்மேகங்கள் மழை பொழிந்து
கழனிகள் வளமாகட்டும்.
பஞ்சம், பசி, பட்டினியின்றி
மக்கள் நலம் காணட்டும்.
கல்வி ,தொழில் வளம் செழித்து
பொருளாதாரம் வளரட்டும்..
போர் மேகங்கள் கலைந்து போய்
புவனம் அமைதிகாணட்டும்.
பொறாமைகளும் , போட்டிகளுமின்றி
பொறுமை உலகாளட்டும்.
அரசாள்வோர்க்கு மக்கள் மேல்
அக்கறை பெருகட்டும்.
ஊழல், லஞ்சம் இல்லாமல்
ஊழியர்கள் உழைக்கட்டும்.
கொலை , கொள்ளை, கற்பழிப்பு
குற்றங்கள் குறையட்டும்.
நீதித்துறையும், காவல் துறையும்
நேர்மையாய் செயல்படட்டும்.
மதவாதம் , தீவிரவாதம் மறைந்து
மக்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.
இயற்கையை பாதுகாத்து வாழ
இதயங்கள் பழகட்டும்.
இவ்வாண்டின் நன்மைகள்
புத்தாண்டிலும் தொடரட்டும்.
இவ்வாண்டின் தீமைகள்
புத்தாண்டில் மறையட்டும்.
நிம்மதியான வாழ்க்கை
நித்திலத்தில் நிறையட்டும்.
இவையனைத்தும் நிறைவேற
இறைவனருள் புரியட்டும்.
இவண் ,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.