தமிழ்நாடு

மர விதைப்பந்து தயாரிப்பாளர்களுக்கு மாண்புமிகு விருது

மர விதைப்பந்து தயாரிப்பாளர்களுக்கு மாண்புமிகு விருது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1200 மாணவிகள், 65 பேராசிரியர்கள் இணைந்து ஒரே நாளில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து அசத்தினர். வேம்பு, புளி, புங்கை, நாவல், சீதா, சப்போட்டா, தேக்கு மர விதைகளை மண் உருண்டைகளில் கல்லூரி மாணவிகள் நேர்த்தியாக பொதிந்து உலர வைத்தனர். நிகழ்ச்சிக்கு மரியா கல்லூரி நிறுவனத் தலைவர் பொறியாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் திருமதி. ஹெலன் முன்னிலை வகித்தார். முதல்வர் சுஷ்மா ஜெனிபர் வரவேற்றார்.

 ஒரு கோடி விதைப்பந்துகள் திட்டத்தின் தலைவர் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் விதைப்பந்து தயாரித்த மாணவிகளை உற்சாகப்படுத்தி பேசினார். கல்லூரி சுற்றுச்சூழல் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சிவதாரணி பாராட்டிற்குரிய வகையில் விதைப்பந்து தயாரிப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். அனைவருக்கும் “மாண்புமிகு விருது” வழங்கி வரம் நாகராஜன் பேசினார். வள்ளியூர் பசுமை சித்திரை, பேராசிரியைகள் மேனகா, கோல்டா, ராசி, மணிமேகலா, பசுமை ஜவகர், மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ், பேராசிரியர்கள் அன்னஷீலா, ஸ்டெல்லா மேரி, அருண், லெனின் கலந்து கொண்டனர். ஒரு வாரம் தொடர்ந்து மாணவிகள் விதைப்பந்துகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. பாதி விதைப்பந்துகளை வள்ளியூர் வட்டாரங்களிலும் மீதி பாதி விதைப்பந்துகளை மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியன் பகுதியிலும் விதைக்க தீர்மானிக்கப்பட்டது. தினமலர் தினேஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளோடு விதைப்பந்துகளை தயாரித்தார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக முப்பெரும் மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மத புனித நூல்கள் பைபிள், குர்ஆன், பகவத் கீதை கல்லூரிக்கு வழங்கப்பட்டன. வேற்றுமைகளில் ஒற்றுமை என்பதை வலியுறுத்தி மும் மத நூல்களை திருமாறன், தினேஷ், லாரன்ஸ், ஹெலன், நாகராஜன், சிவதாரணி மற்றும் ரமேஷ் வழங்கினர். விதைப்பந்துகள் தயாரிக்கும் திட்டத்தினை வள்ளியூர் கல்லூரி மாணவிகளுக்கு அறிமுகப்படுத்திய மரியா கல்லூரி முதல்வர் சுஷ்மா, ஜெனிபரை பொதுமக்கள் பாராட்டினர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விதைப்பந்து தயாரிப்பு தீவிரமடைந்து வருகிறது என சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button