உங்களுக்குத் தெரியுமா 7.5%…?
உங்களுக்குத் தெரியுமா 7.5%…?
+2 முடித்துள்ள அரசு பள்ளி மாணவ , மாணவிகளுக்கான உயர் கல்வி .
7.5% கோட்டா என்றால் என்ன..?
அரசுபள்ளியில் 6-12 வகுப்பு படித்த குழந்தைகளுக்கு அனைத்து தொழில் படிப்புகளிலும் வழங்கப்படும் சிறப்பு ஒதுக்கீடு 7.5% கோட்டாவில் இடம் பிடித்தால் கல்லூரி கட்டணம் & விடுதி கட்டணம் கிடையாது.
RTE Act 2009 மூலம் தனியார் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு படித்த குழந்தைகளுக்கு 7.5% கோட்டா கிடைக்குமா..?
கிடைக்கும் ஆனால் 9, 10, 11, 12 வகுப்புகளை தமிழக அரசுப்பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.
அரசுப்பள்ளியில் ஆங்கில வழியில் படித்தால் 7.5% கோட்டா உண்டா..?
உண்டு
BA, BSC, BCom, BCA படிக்க 7.5% கோட்டா உண்டா…?
இல்லை.
ஆனால் 7.5% கோட்டா குழந்தைளுக்கு புதுமைப்பெண் திட்டம் & தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 கிடைக்கும்.
7.5% கோட்டா எந்தெந்த படிப்புகளுக்கு உண்டு..?
கீழ்காணும் தொழில் படிப்புகளுக்கு மட்டும் 7.5% கோட்டா உண்டு…
MBBS BDS BSMS BUMS BAMS BHMS (NEET தேவை)
BE through TNEA Counselling.
B.V.Sc B.F.SC BSC (Agri) Hort. Forestry Sericulture BBA (Fishery Marketing)
B.Tech. Agri Engi / Bio Tech / Bio Informatics / Dairy Tech.
மொத்தம் எத்தனை பேருக்கு 7.5% கோட்டா Free Seats கிடைக்கும்..?
BE படிப்பில் Phy,Che, Maths அதிக மதிப்பெண் எடுக்கும் சுமார் 11000-பேருக்கு Free Seats கிடைக்கும்,
பிற எல்லா படிப்புகளையும் சேர்த்து சுமார் 1000-பேருக்கு Free Seats கிடைக்கும்.
BA, BSC, BCom, BCA படிக்க முதல் தலைமுறை பட்டதாரி சான்று தேவையா..?
தேவையில்லை…!
எந்த படிப்புகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று வாங்க வேண்டும்…?
MBBS, BDS, BE, Agri, BVSc, BFSC, B.Tech, BA, LLB போன்ற தொழில் படிப்புகளுக்கு இச்சான்று பயன்படும். அதுவும் 7.5 கோட்டாவில் சீட் கிடைத்தால் தேவையில்லை. SC, ST, SCA குழந்தைகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று தேவையில்லை. 7.5% கோட்டா இல்லாத BC , MBC , BCM , DNC குழந்தைகளுக்கு மட்டும் இச்சான்று பயன்படும்.
முதல் தலைமுறை பட்டதாரி சான்றின் பயன் என்ன..?
உங்கள் கல்லூரி Tuition Fees ல் 50% ஐ அரசு செலுத்தும்.
PSTM – Persons Studied Under Tamil Medium கோட்டா என்றால் என்ன?..?
7.5% கோட்டா என்பது அரசு பள்ளியில் 6-12 வகுப்புகள் படித்த குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் சலுகை.
*PSTM கோட்டா என்பது 1-12 வகுப்புகள் அனைத்தையும் Tamil Medium வழியாகவும் தொடர்ந்து கல்லூரி பட்ட படிப்பையும் Tamil Medium வழியாகவும் படித்து முடிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் TNPSC , TRB , USRB வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் 20% சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் டிகிரி வரை தமிழ் வழியில் படித்தால், விரைவில் அரசு பணியில்
சேரலாம்.
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு