இராமநாதபுரம்தமிழ்நாடு

மலேசியப் பாவலர் கோவதன் தமிழகம் வருகை

மலேசியப் பாவலர் கோவதன் தமிழகம் வருகை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாவலர் கோவதன் அவர்கள் தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார். இவரது இயற்பெயர் தனசேகரன். சித்த மருத்துவராகவும் பணியாற்றி வரும் இவர்
எலக்ட்ரோ ஹோமியோபதி மற்றும் அக்குபஞ்சர் மருத்துவத்துறை ஆய்வில் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். 1972 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய இவர் பல்வேறு கதைகள்,கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இதுவரை அருள்மிகு முத்தால பரமேஸ்வரி அம்பாள் இருபா இருபது, அந்தாதியும் பிள்ளைத்தமிழும், புனல்,  சக்திவேல் பாமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 10 நூல்கள் அச்சிடும் நிலையில் உள்ளன. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் மரபுக் கவிதைகளை இன்று வரையிலும் எழுதி வருகின்றார்.  

வருகின்ற 27.12.2025 அன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் கவிதை வாசிக்க உள்ளார்.
நேற்று 21.12.2025 ஞாயிறு அன்று மதுரையில் வசிக்கும் இவரது உறவினரான மலேசியப் பாவலர் தமிழ்மணி எல்லோன் அவர்களின் இல்லத்திற்கு வருகை புரிந்தார். இது அறிந்த இராமநாதபுரம் மாவட்டப் புலவர்களை ஆராய்ச்சி செய்து வரும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, உதவி பேராசிரியர் முனைவர் சே.முனியசாமி அவர்கள் பாவலர் கோவதன் அவர்களைச் சந்தித்து நூலாடை அணிவித்து அவரது நூல்களைப் பெற்றுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button