முதுகுளத்தூர் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் 70ஆவது சுதந்திரதின விழாவை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி  கொடியேற்றினார். ஆணையர் ராதாகிருஷ்ணன், உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் பேரூராட்சியில் தலைவர் சசிவர்ணம் கொடியேற்றினார். செயல் அலுவலர் ஆர்.இளவரசி, துணைத் தலைவர் பாசில் அமீன், உறுப்பினர் சீனிமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கே.கே.கோவிந்தன் கொடி ஏற்றினார்.

காவல்நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி கொடிஏற்றினார். சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், காசிநாததுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் (பொ) க.கவிதா கொடியேற்றினார். திட்ட அலுவலர் உ.சண்முகநாதன் வரவேற்றார்.

சோணைமீனாள் மகளிர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி கொடியேற்றினார். கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ், என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் பேராசிரியர் திலிப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் எம்.காதர்முகைதீன் கொடியினை ஏற்றினார்.டி.இ.எல்.சி உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பிரிட்டோ செல்வக்குமாரி கொடியினை ஏற்றினார். ஸ்ரீ கண்ணா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நிறுவனர் கே.காந்திராஜன்

கொடியினை ஏற்றினார். தலைமை ஆசிரியை  ஆட்லின் லீமா முன்னிலை வகித்தார்.

சரவணப்பொய்கை விளையாட்டு மைதானத்தில் அனைத்து பள்ளி மாணவர்களும் வர்த்தக சங்கம் சார்பில் கலந்து கொண்டு கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி கொடியினை ஏற்றினார். வர்த்தக சங்க பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம், பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்.தூரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து, காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சித் தலைவர் ராமன், கீரனூர் ஊராட்சி உயர் நிலைப்பள்ளியில் ஊராட்சித் தலைவர் புவனேஸ்வரன் ஆகியோர் கொடியேற்றினர்.

சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டி காந்திசிலைக்கு முன் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் வீ.மூக்கையா கொடியேற்றினார். ஆணையர்கள் ராஜி, செல்லம், கடுகுசந்தை ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் கே.மயிலேறிவேலன், சிக்கல் இந்தியன் மெட்ரிக் பள்ளியின்  தாளாளர் முகமது ரபீக், அரசு மேல்நிலைப்பள்ளியில் துணைத் தலைவர் பத்மநாதன், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரெங்கராஜன், பொதிகுளம் யாதவர் குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் அழகர்சாமி ஆகியோர் கொடியேற்றினர்.

சாயல்குடி பேரூராட்சியில் தலைவர் ஜெயலெட்சுமி கண்ணப்பன் கொடியினை ஏற்றினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  பேரூராட்சி தலைவர் ஜெயலெட்சுமி கண்ணப்பன், மலட்டாறு வி.வி.எஸ்.எம். பள்ளியில் நிறுவுனர் சத்தியமூர்த்தி, உச்சிநத்தம் ஸ்ரீ ஆறுமுகவிலாஸ் இந்து தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கொடியேற்றினர்.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் டி.பாலு, பேரூராட்சியில் தலைவர் ரமேஷ்பாபு, பசும்பொன் தேவர் நினைவுக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் மணிமாறன் ஆகியோர் கொடியேற்றினர்.

News

Read Previous

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்

Read Next

செக் குடியரசு

Leave a Reply

Your email address will not be published.