முதுகுளத்தூர் தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் சட்டப் பேரவை தொகுதி திமுக வாக்காளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலர் முத்துராமலிங்கம் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் எழிலரசன் சிறப்புரையாற்றினார்.

 கூட்டத்தில் ஒன்றிய செயலர் பூபதிமணி, நகரச் செயலர் ஷாஜகான், கமுதி ஒன்றிய செயலர் முத்துராமலிங்கம், இளைஞரணி செயலர் ஆறுமுகம், பேரூராட்சி துணைத் தலைவர் பாசில் அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

Read Next

கம்ப ராமாயணத்தை ஏன் எரித்தோம்?

Leave a Reply

Your email address will not be published.