முதுகுளத்தூர் அருகே தனியார் வேளாண்மைக் கல்லூரி திறப்பு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே பேரையூரில் நம்மாழ்வார் தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை செவ்வாய்க்கிழமை பாடலாசிரியர் ஸ்நேகன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூரில் அன்னை குழுமத்தின் சார்பில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில்,திரைப்படப் பாடலாசிரியர் ஸ்நேகன் குத்துவிளக்கேற்றி கல்லூரியை தொடங்கி வைத்தார். அன்னை குழுமத்தின் தாளாளர் அப்துல் கபூர், செயலாளர் உமாயூன் கபீர், நிறுவனர் அன்வர் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நம்மாழ்வார் கல்லூரியின் நிறுவுனர் எம்.ஐ.அகமது யாசின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கல்லூரியின் தொடக்க விழாவில், சிட்டி யூனியன் வங்கி அதிகாரி பாலசுப்பிரமணியன், இயக்குநர் அமீர், கவிஞர்கள் அறிவுமதி, ஈசாக், இசையமைப்பாளர் தாஜ்நூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத் துணை வேந்தர் கே.ராமசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். முடிவில் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் சி.சேகர் நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

ஆறு

Read Next

மாரி…!

Leave a Reply

Your email address will not be published.