முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூர் நகரில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களைக் கிழித்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
முதுகுளத்தூர் நகர் அதிமுக செயலர் பி.காட்டுராஜா அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆதரித்து முக்கிய இடங்களில் விளம்பரங்களை வைத்திருந்தார். அவற்றை விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி மகன் முத்துமணி(47) கிழித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் காட்டுராஜா அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து முத்துமணியை கைது செய்தார்.

News

Read Previous

காதல்

Read Next

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று….

Leave a Reply

Your email address will not be published.