காதல்

Vinkmag ad

உடலியங்க சுவாசமென்னும்
உயிரென்றால்
உயிரியங்க
காதலென்னும் சுவாசம்!
அஃதுன்றன்
அன்பென்னும் நேசம்.
உயிர்போகும்
உடல்வேதனையிலும்
உன்றன் காதல் சுவாசம்
ஓரிடத்தில் அமர்நது
காற்றலைகளூடே
பேரிடர் நீக்கும்
பேருபகரணமாய்க் கண்டு
உயிரை மீட்டுத் தந்ததே!
நீயின்றி நானில்லை;
நானின்றி நீயில்லை!
காதல் சுவாசக் காற்றை
காதில் ஊதுகின்றாய்;
செயலிழக்கும் நரம்பின்
செல்களுக்குள் உன்றன்
செயற்றிறன் மிக்கக்
காதல் சுவாசம்
காதில் நுழைந்து
கன்னத்தில் மோந்து
உடலென்னும் பலூனை
உயிர்ப்பித்து இந்தப்
படைப்பினத்தை
நடைப்பிணத்திலிருந்து
மீட்டெடுக்கின்றாய்; அதனைப்
பாட்டெடுத்துப் பகர்கின்றேன்
உயிரின் உயிரே
காதல் சுவாசமே!!!!!

_அதிரை கவியன்பன் கலாம்,அபுதாபி

News

Read Previous

காதலர் தின ஸ்பெஷல் கவிதை

Read Next

முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

Leave a Reply

Your email address will not be published.