மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Vinkmag ad

முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். பேரணி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி, காந்தி சிலை

ஐந்து முனை ரோடு, அரசு மருத்துவமனை வழியாக பேருந்து நிலையத்தில் முடிவு பெற்றது. பேரணியின் போது பள்ளி மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சசிவர்ணம், துணைத்தலைவர் பாசில் அமீன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஷாஜகான், பேரூராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது சுலைமான், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டி, நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன், தமிழாசிரியர் ஜாகிர்உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அலிஅக்பர், நசீர், கோபால்சாமி, பரமேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

News

Read Previous

தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு – மின்னூல் – தஞ்சை வெ.கோபாலன்

Read Next

மண் சாலைகளை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த கவுன்சிலர்கள் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published.