மண் சாலைகளை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த கவுன்சிலர்கள் கோரிக்கை

Vinkmag ad
முதுகுளத்தூர் யூனியன் பகுதியில் மண் சாலை களை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூட்டத்தில் கவுன் சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

யூனியன் கூட்டம்

முதுகுளத்தூர் யூனியன் கூட் டம் அதன் தலைவர் சுதந்திரா காந்தி இருளாண்டி தலைமை யில் நடைபெற்றது ஆணையா ளர் குருநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் யோகேசுவரன் வர வேற்று பேசினார். இதில் முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே நடை பெற்ற விவாதங்கள் வரு மாறு:-

தனசேகரன்:- மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊராட்சி களுக்கு தேவையான போர் களை கொடுத்துள்ளன. ஆழ் குழாய் அமைத்து பைப்லைன் மூலம் வேலை செய்கிறார்கள். இதில் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும்.

சிவகுமார்:- விளக்கனேந் தல் ஊராட்சியில் உள்ள 5 சாலைகளும் மண் சாலைகளா கவே உள்ளன. இதனை தரம் உயர்த்தி தார்ச்சாலையாக மாற்ற வேண்டும். யூனியன் அலுவலகத்தில் கதவுகள், நிலைகள் பெயர்ந்து எப்போது விழும் என்ற நிலையில் உள் ளது. இதனை உடனடியாக மராமத்து செய்ய வேண் டும்.

ஆணையாளர்:- இதனை எடுத்துச்செய்ய காண்டிராக் டர்கள் முன்வரவில்லை.

சாலைகள்

முருகன்:- ஆனைசேரி, நீர்க் கோழியேந்தல், கீழக்குளம், அபிராமம் வழியாக செல் லும் சாலை பழுதடைந்துள் ளது. இதனை உடனடியாக மராமத்து செய்ய வேண் டும்.

கோபால்:- சிறுதலை, செங் கப்படை, வாத்தியனேந்தல், பனையடியேந்தல் ஆகிய ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

வேலுச்சாமி:- ஊராட்சி தலைவர்கள் செய்யும் வேலை களுக்கு கொடுக்கும் ஒத்து ழைப்பால் வேலை விரைவில் முடிந்து விடுகிறது. கவுன்சிலர் களின் வேலைகளுக்கு ஒத்துழைப்பு இல்லை. ஆரோக்கியமேரி:- புஷ்பவ னம், செங்கப்படை சாலை மோசமாக உள்ளது. இந்த சாலையை மராமத்து செய்ய வேண்டும்.

ஆணையாளர்:- பொது நிதி மூலம் சாலை போட நட வடிக்கை எடுக்கப்படும்.

மதிப்பீடு

முருகன் எம்.எல்.ஏ.,:- யூனி யன் அலுவலகத்தை சீர மைக்க ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. முதலில் திட்ட மதிப்பீடு தயார் செய்யுங்கள். பி.எம்.சி. திட்டத்தில் எத்தனை சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

என்ஜினீயர்:- கலெக்டர் கேட்கவில்லை. ஆதலால் மதிப்பீடு தயார் செய்யப்பட வில்லை.

முருகன் எம்.எல்.ஏ.,:- மோச மான சாலைகள் அனைத்திற் கும் மதிப்பீடு தயார் செய்து வைக்க வேண்டும். கலெக்டர் கேட்கும் போது தயார் நிலை யில் வைத்திருக்க வேண் டும். பசுமை வீடுகள் எவ்வ ளவு வேண்டும்? என்று அதிகாரி கள் கணக்கெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.

News

Read Previous

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Read Next

சஹர் நேரம்… -ஆளூர் ஷா நவாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *