போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
முதுகுளத்தூரை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். உள் நோயாளிகளாக 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த மருத்துவமனையில் 8 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
தினமும் மருத்துவமனைக்கு வரும் 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளுக்கும், மருத்துவமனை யில் தங்கி சிகிச்சை பெற்று வரும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும் இந்த 2 டாக்டர்கள்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். இத னால் சிகிச்சைக்கு வருவோர் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

போதிய எண்ணிக்கையில் டாக்டர்கள் இல்லாததால் விபத்துகளில் காயமடைந்து வருவோருக்கும், அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. அவசர சிகிச்சை நோயாளிகளை டாக்டர்கள் மதுரை அல்ல து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் விபத்து, விஷப்பூச்சிகள் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் கிராம மக்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே மருத்துவமனையில் உடனடியாக போதிய எண்ணிக்கையில் டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமுமுக ஒன்றிய தலை வர் வாவா கூறுகையில், “முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிராம மக்களின் நலன் கருதி போதிய டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

 

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=279089&cat=504

News

Read Previous

மூன்றாம் தலைமுறை பேஷ் இமாம் … !

Read Next

வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலை

Leave a Reply

Your email address will not be published.