போதிய கட்டட வசதி இல்லாததால் மரத்தடியில் கல்வி கற்கும் அவலம்

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர்நிலைபள்ளியில், கட்டட வசதியின்றி மாணவர்கள் மரத்தடி நிழலில் படிக்கும் அவலம் உள்ளது.
இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2009ல், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தபட்டது. போதிய கட்டட வசதியில்லாததால், தொடக்க பள்ளி வளாகத்திலும், மரத்தடி நிழலிலும் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் உள்ளது. ஆனால் பள்ளிக்கு வழங்கபட்ட இடம், தற்போது இல்லை.

இதனால் போதிய கட்டட வசதியில்லாமல், மாணவர்கள் மரத்தடி நிழலில் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில், மாணவர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. எனவே, இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக வகுப்பறைகள் கட்டுவதற்கு பள்ளி கல்வித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News

Read Previous

ஜாவித் நன்னி வஃபாத்து

Read Next

ஆர்.டி.ஓ., ஆய்வு

Leave a Reply

Your email address will not be published.