தானிய களமாக மாறிவிட்ட முதுகுளத்தூர்- கமுதி ரோடு; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

Vinkmag ad

முதுகுளத்தூர்- கமுதி செல்லும் ரோடு, தானிய களமாக மாறி இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

முதுகுளத்தூர்- கமுதி இடையே உள்ள கரிசல் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம், கம்பு, கேழ்வரகு பயிர்களை ரோடுகளில் குவித்து, தானியங்களை பிரித்தெடுக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த தானிய பயிர்களில் சிக்கி, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் இருப்பதால், இவ்வழியே செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.இதுகுறித்து கருங்குளம் மாரி கூறுகையில், “”ரோடுகளில் அளவுக்கு அதிகமான உயரங்களில், தானிய பயிர்களை குவித்து, பிரித்தெடுப்பதால் தினமும் 10 மேற்பட்ட வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகிறார்கள்,” என்றார்.

News

Read Previous

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்

Read Next

நியாயங்களுக்காக அநியாயங்களா?

Leave a Reply

Your email address will not be published.