கிராம உதவியாளர், உதவி வரைவாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

Vinkmag ad

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கிராம உதவியாளர் பணிக்கும், மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்கு உதவி வரைவாளர் பணிக்கும் பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திக்குறிப்பு விவரம்:வருவாய் கிராம உதவியாளர் பணி:

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வருவாய் கிராம உதவியாளர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்படவுள்ளனர். 5 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். கடந்த 1.7.2014இன்படி பிற்பட்ட வகுப்பினருக்கு வயது 21 முதல் 32. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுவானவர்ளில் ஆண்கள் மற்றும் பெண்களில் முன்னுரிமை

உள்ளவர்களாக இருந்தால் பிற்பட்ட வகுப்பினர்களில் வெங்களக்குறிச்சி, மகிண்டி, சூரன்குளம், தொட்டியவலசை, கருங்காலக் குறிச்சி, கண்ணாபுரம், மைக்கேல்பட்டிணம், சவேரியார் பட்டிணம் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் பரிந்துரைக்கப்படுவர். வட்டார அளவில் தகுதியானவர்கள் இருந்தாலும் அனைவரும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

உதவி வரைவாளர் பணி:

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் பணிக்கு உதவி வரைவாளர் பணிக்காலியிடத்துக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. டிராப்ட்ஸ்மேன் சிவில் சான்றிதழை பதிவு செய்தவராக இருக்க வேண்டும். கடந்த 1.1.2015இன்படி ஆதிதிராவிட வகுப்பினர் வயது 18 முதல் 35 வரை. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் ஆதிதிராவிட வகுப்பினராக இருந்து முன்னுரிமையற்றவர்களில் பெண்கள் மட்டும் அனைவரும் பரிந்துரைக்கப்படுவார்கள்.

இவ்விரு பணிகளுக்கும் தகுதிகளையுடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு திங்கள்கிழமை (மார்ச் 23) தங்களது அனைத்துச் சான்றிதழ்களோடும் நேரில் வந்து பரிந்துரை விவரத்தினை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

Read Previous

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா

Read Next

நீர்த்தேக்கத் தொட்டி காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

Leave a Reply

Your email address will not be published.