கடலாடி, முதுகுளத்தூரை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்திட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர், : கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகவிட்டன. எனவே இப்பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் ஆப்பனூர், கடலாடி, கீழச்செல்வனூர், சாயல்குடி, கண்டிலான், முதுகுளத்தூர் தெற்கு, இளஞ்செம்பூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. விவசாயமே பிரதானமான தொழிலான இப்பகுதிகளில் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பருவமழை  போதிய அளவு பெய்யவில்லை. இதனால் கண்மாய் உள்ளிட்ட நீர்பிடிப்புகளில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் தேங்கவில்லை. மேலும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால், வயலுக்கு வந்த சேர வேண்டிய வைகை தண்ணீ ரும் கிடைக்கவில்லை.

இதுபோன்ற காரணங்களால் இப்பகுதிகளில் விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது. நட்டு வைத்த பயிர்களும் கருகிவிட்டன. கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள், பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்க ளை அதிகாரிகள் ஆய்வு செய்து, வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண் டும் என விவசாயிகள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஆப்பனூரை சேர்ந்த திமுக ஒன்றிய விவசாய அணி செயலாளர் குருசாமி கூறுகையில், கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் போதிய மழை பெய்யாமல் விவசாயம் முற்றிலும் பொய்த்துவிட்டது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து ஆண்டுதோறும் கடலாடி பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி இப்பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண் டும். இதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News

Read Previous

இது தூக்கிப் போடவேண்டிய காகிதம் அல்ல!

Read Next

பிப்ரவரி 6, துபாயில் மீலாது விழா

Leave a Reply

Your email address will not be published.