உதவித்தொகை கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு

Vinkmag ad

முதுகுளத்தூர், : உழ வர் பாதுகாப்பு திட்ட தில் உதவித்தொகை கிடைக்கா மல் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கட ந்த ஓராண்டாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூர், கட லாடி, கமுதி உள்ளிட்ட அனைத்து தாலுகாவிலும் சமூக பாதுகாப்பு திட்டத் தின் கீழ் பல் வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, இற ப்பு நிவார ணம், திருமண உதவித் தொ கை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட பல் வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஓராண்டாக முதுகுளத்தூர் பகுதியில் இந்த உதவித்தொ கை வழங்கப்படாமல் உள்ளது. இத னால் கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைகோட்டி ற்கு கீழ் உள்ளோர் கடுமை யாக பாதிக்கப்படுகின்றனர்.

முதுகுளத்தூரை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் கூறு கையில்,“உழவர் பாது காப்பு திட்டத்தில் உதவித்தொகை க்கு மனு செய்து ஓராண்டா கி யும் இதுவரை கிடைக்க வில்லை. முதி யோர் உதவித்தொகையை முற்றிலும் நிறு த்தி விட்ட னர். உதவித் தொ கை கோரி வரும் மாணவ, மாணவிகள் கடந்த ஓராண் டாக அலைக்கழிக்கப்படுகின்றனர். உதவித்தொகை எப்போது கிடைக்கும் என்று அலுவலகத்தில் கேட்டால் முறை யான பதில் கிடைப்பதில்லை. கலெக்டர் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண் டும்“ என்றனர்.
சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக ஊழியர்கள் சிலர் கூறுகையில், “உதவித்தொ கை பெற கொடுக்கப்பட்ட மனு க்கள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளன. அரசி டம் இருந்து போதிய நிதி வரவில்லை. அரசிடம் இரு ந்து நிதி வந்தவுடன் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் மா ணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்“ என்றனர்.

News

Read Previous

உயிர் கொடுக்கும் தோழன் : ரத்ததானம்

Read Next

கமுதி-முதுகுளத்தூர் சாலையில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்

Leave a Reply

Your email address will not be published.