அழிவின் விளிம்பில் பறவைகள் சரணாலயம்

Vinkmag ad

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் பராமரிப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளது.தமிழகத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்களில் ஒன்று சித்திரங்குடி பறவைகள் சரணாலயம். சித்திரங்குடி கண்மாய்க்கு 9 ஆண்டுகளாக பிரதான ஆற்று படுகைகளில் இருந்து தண்ணீர் வரத்து இல்லை.
போதிய பருவமழை இல்லாததால் கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால், இங்கு இனப்பெருக்கத்திற்காக வரும் வெளி நாட்டு, உள்நாட்டு பறவைகள் கண்மாயில் தண்ணீர் இல்லாததால் வானத்தை வட்டமிட்டு அருகிலுள்ள வயல்வெளிகளில் தங்குவதால் வேட்டைகாரர்களிடம் சிக்கி பலியாகின்றன.சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்து வருகிறது. இதனால் சரணாலயம் இருந்த சுவடே தெரியாமல் அழியும் அபாயம் உள்ளது.

News

Read Previous

மார்பக புற்றுநோய்

Read Next

வாழ்க்கை நலம்

Leave a Reply

Your email address will not be published.