அரசு பஸ்களில் அடிக்கடி பழுதாகும் டிக்கெட் மிஷின் நடத்துனர்கள் கடும் அவதி

Vinkmag ad

அரசு பஸ்க ளில் நடத்துனர்கள் பயன்படுத்தும் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால் பெரும் அவதியடைகின்றனர்.
ராமநாதபுரம் மற்றும் புறநகர், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய ஊர்களில் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

விரைவு பஸ், சில நிறுத்த பஸ், பாய்ண்ட் டூ பாய்ண்ட், எக்ஸ்பிரஸ் என பல வகைகளில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு தகுந்தார்போல் பல்வேறு கட்டணங்களும் வசூலிக்கப்படு கின்றன. தற்போது டிக்கெட் வழங்குவதற்கு நடத்துனர்களிடம் டிக்கெட் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. இந்த மிஷின் கள் திடீரென பழுதடைந்து விடுவதால் நடத்துனர்கள் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க முடியா மல் திணறுகின்றனர்.
இதுகுறித்து நடத்துனர்கள் கூறுகையில், டிக்கெட் மிஷின்களால் தாங்களுக்கு வேலைப்பழு குறைவாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் டிக்கெட் மிஷின்களால் தற்போது எங்களுக்கு பெரிய பிரச்னை உருவாகியுள்ளது.

நீண்டதூர பஸ்களில் திடீரென டிக்கெட் மிஷின் கள் பழுது ஏற்பட்டால் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க முடியவில்லை. டிக்கெட் கொடுக்காமல் அவர்களிடம் பணமும் வாங்க முடியாது. இதனால் பெரும் குழப்பமாக உள்ளது. எப்போது இயந்திரத்தில் பழுது ஏற்படும் என கூறமுடியாத நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நிர்வாகம் சார்பில் தற்போது மாற்று பயணச்சீட்டு புத்தகங்கள் வழங்கியுள்ளனர் என்றனர்.

 

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளர் யோகராஜ் கூறு கையில், பழுது அடைந்த பயணச்சீட்டு மிஷின்கள் சேகரித்து காரைக்குடி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை விரைவில் சரிசெய்யப்படும். மிஷின் பழுதடைந்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் கொடுக்க நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

News

Read Previous

கல்ஃப் நியூஸ் ஆங்கில வார இதழில் டாக்டர் எஸ் அப்துல் காதர் பேட்டி

Read Next

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்

Leave a Reply

Your email address will not be published.