தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும்

Vinkmag ad

தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டாண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். ( குர்ஆன், 2 :233) ₹

0 கடந்த புதனன்று (11.4.2018) உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை :

குழந்தைகள் வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்க தாய்ப்பால் அவசியம். பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டினால், நோய் தொற்றுகளிலிருந்தும் உயிரிழப்பிலிருந்தும் குழந்தையைக் காக்கலாம்.

தாய்ப்பால் ஊட்டாமல் விட்டால், அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பால் ஊட்டினால், வயிற்றுப்போக்கு, இதர நோய் தொற்றுகள் காரணமாககப் பச்சிளங்குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உண்டு.

பிறந்தது முதல் 2 ஆண்டுகளுக்குத் தாய்ப்பால் ஊட்டினால், 5 வயதுக்குட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை ஆண்டுதோறும் தடுக்க முடியும்.

தாய்ப்பாலால் குழந்தையின் கவனம், அறிவுத் திறன் மேம்படும். தாய்க்கு மார்பகப் புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும்.

இவ்வாறு யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா எச் போர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
( தி இந்து தமிழ், 13.4.18

News

Read Previous

14 ஏப்ரல் — மாமனித மாமேதை அம்பேத்கர் பிறந்த நாள்

Read Next

பட்டுக்கோட்டையாரும் அம்பேத்காரும்

Leave a Reply

Your email address will not be published.