வெள்ளரியும் சுரைக்காயும்…

Vinkmag ad

வெள்ளரியும் சுரைக்காயும்…

இன்று உள்ள துரித உணவு கலாச்சாரத்தில் கிரியேட்டின் அளவு அதிகமாகி கிட்னி கெட்டுப்போய் டயாலிஸ் செய்வதும் அதனைத்தொடர்ந்து கிட்னி மாற்றுவதும் சர்வசாதாரண விசயமாக மாறி விட்டது..உடலில் உப்பு என்பது ஓரளவு இருக்க வேண்டியதுதான்..அந்த அளவைவிட அதிகமாகும் போது நிலமை மிக மோசமாக போய் விடுகிறது..

இதற்கு மருந்து கொடுத்து சாப்பிட சொல்லி அதற்கு இணை உணவாக காய்கறிகளை சாப்பிடச் சொன்னால்…மருந்தை சாப்பிடுகிறார்களே தவிர காய்கறிகளை சாப்பிட மறுக்கிறார்கள்..காரணம் என்னவென்று இதுவரை புரியவில்லை..

முழுமையாக கெட்டுப்போன கிட்னியையும் மீட்டு கொண்டு வரும் ஆற்றல் வெள்ளரிக்காயுக்கும் சுரைக்காயுக்கும் உண்டு..”சுரைக்காய்க்கு உப்பில்லை” என்ற பழமொழி கேள்விப்பட்டு இருப்பீர்கள்..அது தவறு. “சுரைக்காயால் உப்பில்லை ” என்பதுதான் சரி…சுரைக்காய் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பை உறிஞ்சி சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும்…

அடுத்து வெள்ளரிக்காய்.இதுவும் சுரைக்காயை போன்று உப்பை உறிஞ்சும் தன்மை கொண்டதுதான்..இது இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு.இது இரண்டுமே கோடைக்காலத்தில்தான் கிடைக்கும்…

வெள்ளரிக்காயையும் சுரைக்காயையும் பச்சையாகவும் சாப்பிடலாம்.ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்..சமைத்தும் சாப்பிடலாம்..கிடனி பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் சுரைக்காய் ஜூஸை 3 வேளை கொடுத்து வந்தால் அவர்கள் பூரண குணமடைவார்கள்..ஆனால் இந்தக்காயை ஜுஸ் செய்து சாப்பிட்டால் எங்கே ந உடல் சரியாக போகிறது என்ற அவ நம்பிக்கையால் பலபேர் மருத்துவ மனையை நோக்கி படை எடுக்கின்றனர்..இதனால் பொருளாதாரமும் உடல் நிலையும் வீணாகுமே தவிர குணமடைவது வினாக்குறிதான்..

எந்த பாதிப்பும் உடலில் இல்லாதவர்கள் சுரைக்காயும் வெள்ளரிக்காயும் சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு உடல் சுத்தமாகும்..எனவே சீசனில் கிடைக்கும் இந்த இரண்டு பொருட்களையும் சாப்பிடாமல் இருந்து விடாதீர்கள்..

சுரைக்காய் ஒரு சிறுநீர் பெருக்கி..சிறுநீர் வராமல் அவதிப்படுபவர்களும்,நீர் கடுப்பு உடையவர்களும் சுரைக்காய் சாப்பிட்டால் அதிலிருந்து விடுபடலாம்..

News

Read Previous

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்…

Read Next

வெற்றுத்தாள்

Leave a Reply

Your email address will not be published.