நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

Vinkmag ad

நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

நிவர் புயல் நாளை தமிழக கடற்கரையோரப்பகுதியில் கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில்
கடற்கரையோர மக்கள் மற்றும் டெல்ட்டா மாவட்ட மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்

தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு அதி கன மழையை இந்தப்புயல் தரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது

புயல் நாளை மாலை முதல் பின்னிரவு வரை எப்போது வேண்டுமானாலும் கரையைக்கடக்கும் என்று எதிர்பார்த்தாலும்
காற்று மற்றும் மழை இன்று பின்னிரவோ அல்லது நாளை காலையில் இருந்தே ஆரம்பித்து விடும் என்று தெரிகிறது

மழை ஆரம்பித்தவுடனே மின்சாரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டு விடும்.
எனவே கட்டாயம் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் டேங்க்கில் தண்ணீர் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். காரணம் புயல் ஏற்படுத்தியிருக்கும் சேதங்களை சரிசெய்து மீண்டும் மின்சாரம் கிடைக்க சில தினங்கள் ஆகக்கூடும்.

வீட்டில் இண்வெர்ட்டர் இருந்தால் பகல் முழுவதும் அதை உபயோகிக்காமல் இரவு மட்டும் ஒரு மின் காற்றாடிக்கு அதை உபயோகப்படுத்தலாம்.

டூவீலர் வண்டிகளுக்கு பெட்ரோல் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

கிராமங்களில் அடுப்பெரிக்கத் தேவையான மண்ணெண்ணெய் மற்றும் விறகு வாங்கி வைத்திருக்க வேண்டும்.
திடீரென கேஸ் சிலிண்டர் தீர்ந்து போய் விடவும் வாய்ப்பு உண்டு. மாற்று கேஸ் சிலிண்டர் வருவதற்கு தாமதம் ஆகலாம்.

வீட்டைச்சுற்றி வீட்டுக்கு மேற்புறத்தில் புயலினால் ஏற்படும் சூரைக்காற்றால் எளிதில் தூக்கி வீசியெறியப்படும்
பொருட்கள் இருப்பின் அவற்றை வீட்டுக்குள் கொண்டு வந்து வைக்க வேண்டும்.

வீடுகளில் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பான அடைக்கலத்தை உறுதி செய்ய வேண்டும்

உயிர்காக்கும் மருந்துக்கான நீரிழிவு/ ரத்த கொதிப்பு/ இதய நோய் / சிறுநீரகநோய் மருந்துகளை இன்றே வாங்கி அடுத்த பதினைந்து நாட்களுக்கு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

அடுத்த ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பலசரக்கு சாமான்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம்

குழந்தைகள் வைத்திருப்போர்
பால் பவுடர் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வயிற்று வலி லேசான சளி போன்றவற்றுக்கு தேவையான சொட்டு மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.
குளிருக்கு இதமான கம்பளியில் குழந்தைகளை வைத்திருக்க வேண்டும்.

காய்ச்சல் மாத்திரையான பாராசிட்டமால் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வந்தால் தண்ணீர் சேரும் என்ற நிலையில் இருக்கும் பகுதிகள் , கடற்கரையோரம் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் கட்டாயம் அரசின் புயல் பாதுகாப்பு முகாம்களுக்குச் சென்று தங்க வேண்டும். இந்தப்புயலால் கடலின் நீர்மட்டம் இரண்டு மீட்டர் உயர்ந்து அருகில் உள்ள நிலங்களுக்குள் வரலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உடனடியாக கெட்டுப்போகாத காய்கறிகள், எளிதில் உணவாக சமைக்கக்கூடியவைகள், பிஸ்கட், பிரட் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளலாம்

ஒரு டார்ச் லைட் ( அதில் பேட்டரி மாற்றிவிட வேண்டும்)
தேவையான அளவு மெழுகுவர்த்திகள்
தீப்பெட்டி
விசிறிகள்
கத்தி
குடை
கயிறு
பவர் பேங்க் ( முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டது)
க்ளூகோஸ் பாக்கெட்
குடிநீர் ( வீட்டின் ஒரு வாரத்தேவைக்கு)
மேற்சொன்னவை கட்டாயம் இருப்பது சிறந்தது.

கட்டாயம் நீரைக்காய்ச்சிப் பருக வேண்டும்.
அவசியத்தேவையன்றி மழை பொழியும் போது வெளியே வரக்கூடாது.

ரேடியாவில் அல்லது இணையம் மூலம்
இந்திய வானிலை மையத்தின் தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

News

Read Previous

கலைஞர் என்கிற மாமனிதர்

Read Next

தண்டுவடம்

Leave a Reply

Your email address will not be published.