சர்க்கரை நோயை அதிகரிக்கும் பச்சரிசி

Vinkmag ad

முற்றிலும் இயற்கையாக தோல் நீக்கி தயாரிக்கப்படும் கைக்குத்தல் அரிசியைத் தவிர்த்து பச்சரிசி உணவை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஆபத்து  அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பச்சரிசி உணவு குறித்து மாசசூசட்ஸ் நகரின் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பொது   சுகாதாரத்துறை ஆய்வு ஓன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியளர்கள் கூறியதாவது.

பச்சரிசி உணவை சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அரிசியை தவிர்த்து தயாரிக்கும் நடைமுறையில் உமியானது முற்றிலும் நீக்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுகிறது. ஆனால் இயற்கை முறையில் உமிகளை நீக்கி தயாரிக்கப்படுகிறது. கைக்குத்தல் அரிசியில் மேல் இழை நீடிக்கிறது.

மேல் இழையால் பச்சரிசியில் நார்சத்து,மினரல்கள்,விட்டமின்கள், பைட்டோகெமிக்கல் போன்றவை பாதுகாக்கப்படுகிறது. இவை அரிசி உணவால்  ரத்தத்தில் அதிகரிக்கக்கூடிய சர்க்கரை அளவை கட்டுபடுத்தி விடுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் பச்சரிசியை பயன்படுத்த முடியும்.

பாலீஷ் செய்யப்பட்ட பச்சரிசியில் சத்துகள் அழிவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரைநோய் ஆபத்தையும் அதிகரிக்க செய்கிறது.  குறிப்பாக வாரத்துக்கு 5 முறைக்கு மேல் பச்சரிசி உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

News

Read Previous

மலேசியப் பெண்ணிலக்கியவாதிகளுடன் ‘மானா’ வின் மறக்க முடியாத அனுபவம்

Read Next

மறுமை வாழ்வை நேசிப்போம்!

Leave a Reply

Your email address will not be published.