காய்ச்சலுக்கு திப்பிலி ரசம்

Vinkmag ad

காய்ச்சலுக்கு திப்பிலி ரசம்

தேவையானவை
திப்பிலி – 5, மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் – அரை கப், தக்காளி – 2 (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – சிறிதளவு, வெல்லம் – ஒரு சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க
நெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை
புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் திப்பிலி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்துக் கரைத்து ஒரு கொதிவிடவும். இதனுடன் அரைத்த பொடி, பருப்பு தண்ணீர், கொத்தமல்லித்தழை சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து ரசத்துடன் கலந்து பரிமாறவும்.

பயன்
கபத்தைக் கரைக்கும்; உடல் சூட்டைத் தணிக்கும்; காய்ச்சலுக்கு ஏற்ற மருந்தாகும்.

News

Read Previous

அடல்ஜி எனும் இந்திய அரசியல் பெருங்கடல்

Read Next

வெள்ளம் என்றொரு மிருகம்

Leave a Reply

Your email address will not be published.