அடல்ஜி எனும் இந்திய அரசியல் பெருங்கடல்

Vinkmag ad

அடல்ஜி எனும் இந்திய
அரசியல் பெருங்கடல்
—————————————

காட்சிக்கு எளியவர்
கருத்து பெட்டகம்
கவிதை நாயகன்
அடல் பிகாரி வாஜ்பாய் எனும் இந்திய அரசியல் பெருங்கடலே…

ஜனசங்கம் ஜனதா
பாரதீய ஜனதா என்ற
கருவை உருவாக்கிய
திருவாளரே…

அரை நூற்றாண்டு இந்திய அரசியல் பொதுவாழ்வில்
புதுப்பாதைகள் வகுத்தவரே..

அரசியல் எப்படி
நிகழ்த்த வேண்டும் என
நிஜமாகவே வாழ்ந்து காட்டியவரே….

இந்திய அளவில்
இரண்டு இடங்களில் வென்ற ஜன சங்கத்தை
இருநூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெறச் செய்து
பிரதமரான பிதாமகனே.

நீ செய்த சில
சாதனைகளை
சரித்திரம் மறக்காது
சரித்திரமே..

நாத்திகம் பேசிய
திராவிட கட்சிகள் உன்னுடன்
நம்பிக்கையுடன் கை கோர்க்க செய்த
நம்பிக்கையாளன் நீ – காரணம்
மதம் எனும்
மதம் பிடிக்காத
மனித நேயன் நீ…

பாரத தாய்க்கு
மூன்று பிள்ளைகளும்
முக்கியம்
ஒன்று இந்து
ஒன்று கிறிஷ்து
ஒன்று முஸ்லிம் என
வேற்றுமையில் நல் ஒற்றுமை கண்ட
புனிதன் நீ…

போக்ரான் அணு
சோதனை நடத்தி
சாதனை படைத்தாய்.

அணு விஞ்ஞானிமேதகு
அப்துல் கலாம் அவர்களை நாட்டிற்கு
அடையாளம் காட்டி ஜனாதிபதி
அரியணை ஏற்றி
அறிவுக்கு அழகு சேர்த்த
அறிவு பெட்டகம் நீ…

பாரதிய ஜனதா கட்சி
பாகிஸ்தான் எதிரிகட்சியென
பழி சுமத்தியவர் வாயடைக்க
பாகிஸ்தான் இந்தியா இடையே இணைப்பு
பேருந்து போக்குவரத்து தொடங்கிய
பேரன்புடையவன் நீ…

கார்கில் போரின்போது
தீரத்துடன் போராடி
இந்திய தாயின்
எல்லை காத்து
வெற்றி பெற்ற
வெற்றியாளன் நீ….

காஷ்மீர் முதல்
கன்னியாகுமரிவரை
தங்க நாற்கர சாலை
தரமாக அமைத்த
வளமான இந்தியாவின்
வளர்ச்சி நாயகன் நீ…

தலையை சற்று
தாழ்த்தி சிறிது இடைவெளிவிட்டு
தலையை உயர்த்தி
பாரத் மாதாகி என்ற உனது பேச்சு பேரழகு….

நீ நடத்திய நல்லாட்சியில்
மாட்டுக்கறி
பிரச்சினை இல்லை
மீத்தேன் திட்டமில்லை
நீயுட்ரினோ பதட்டமில்லை
நீட் கொள்கை இல்லை
பக்குவமாகசொன்னால்
பாஜக ஆட்சியில்லை…..

ஒருமுறை தேசிய விருது நிகழ்வு
சிறு சேமிப்பு சாதனையாளர்
தமிழகத்தை சேர்ந்த
சின்னப் பிள்ளை அம்மையார்
வரலாறு வாசிக்கப்படுகிறது
பிரதமர் என்று
கண நேரமும் யோசிக்காமல்
காலில் விழுந்தாய் புகழ்
வானில் எழுந்தாய்…..

இந்திய தாயின்
ஈடில்லா மைந்தனே
நிலையாத ஆயுள் என்றாலும்
நிலைத்த புகழ் உனக்கு….

வணங்குகிறேன்
வரலாற்று நாயகனே……

பா.திருநாகலிங்க பாண்டியன்

கீழச்சிறுபோது.

News

Read Previous

கத்திரிக்காய்

Read Next

காய்ச்சலுக்கு திப்பிலி ரசம்

Leave a Reply

Your email address will not be published.