“எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி

Vinkmag ad
மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது “நோய்”.
நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.
சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.
சித்தர்கள் :
“எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!”
என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.
இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும் நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர் சித்தர்கள். இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக்கொடுத்துள்ளனர்.
காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்கவேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.
காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.
இதை செய்வதால் என்ன நடக்கும்!
1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்தஓட்டத்தை
சமன்படுத்துகிறது என்று அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.
சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
“8” வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம் “முடிவில்லாதது” மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது.
இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தசித்தர்கள், இதையே
“வாசி யோகத்தில்” (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்!
“வாழ்க வளமுடன்”
( படித்ததில் பிடித்தது )

News

Read Previous

ஜப்பானிடமிருந்து அணு உலைகள் தேவையா?

Read Next

மழையின் தாண்டவம் !

Leave a Reply

Your email address will not be published.