உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!

Vinkmag ad

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 சக்தி வாய்ந்த உணவுகள்!!!

உடலின் ஆரோக்கிய சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை செய்ய சில முக்கிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையான முறைகளில் மட்டுமே அதிகரிக்க முடியும் என்பது. இயற்கையான முறை என்றால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இரு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று உடற்பயிற்சி மற்றொன்று நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கும் உணவுகளை உண்ணுவது. இந்தக் கட்டுரையில், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களைக் குறித்து கவனம் செலுத்தலாம் வாங்க. பாடி பில்டர் போன்று அழகான உடல் கட்டமைப்பைப் பெற உதவும் உணவுகள்!!!

நம் உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் இருந்தால் பெரும்பாலான நோய்களைத் தவிர்த்துவிடலாம். உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி வலுவுடன் இருக்கும் போது, ஹார்மோன் மற்றும் எதிர்மறை அணுக்களை கட்டுப்படுத்தும் திறன் அதிமாக இருக்கும். இந்த குறிப்பிட்ட உணவுகளை உண்ணுவது ஆரோக்கியமாகவும், நோய்களின்றியும் வாழ சிறந்த வழியாகும். ஆரோக்கியமான தலைமுடியும், ஸ்கால்ப்பும் வேண்டுமா? அப்ப இதெல்லாம் சாப்பிடுங்க! சரி வாங்க இந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தரும் 15 விதமான உணவுகளைப் பார்க்கலாம். இவை நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கக்கூடியவை.

பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா-க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான இரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் உணவுகளில் அடுத்ததாக வருவது முட்டை. இவற்றில் பல வைட்டமின்கள், குறிப்பாக நோய்களுடன் போராடும் வைட்டமின் டி, பாலுணர்வைத் தூண்டும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் கொண்டது.

இவை அருமையான பழங்கள் என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது. டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே முளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. உண்மையில், காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.

தேங்காய் எண்ணெயும் தேங்காயும் பெருமளவு ஆரோக்கியமான பண்புகளைக் கொண்டவை. இதிலுள்ள லாரிக் அமிலம் உடலில் சென்று மோனோலாரினாக மாற்றமடைந்து விடும். நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கவில்லை என்றால், மோனோலாரின் என்ற பொருள் தாய்ப்பாலில் அதிகம் உள்ளதுடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வலுப்படுத்த உதவுகிறது.

பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு என்பது முழுமையடையாது. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது. பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. எனவே மேற்கூறப்பட்ட உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டு நோய் வந்தபின் அவதியுறுவதை விட வருமுன் காப்பவர்களாக, புத்திசாலிகளாக இருங்கள்.

News

Read Previous

இட்லி, தோசை மாவை இன்ஸ்டன்டா வாங்கினால் வரும் ஆபத்து!

Read Next

சிற்றருவி! பேரருவி!

Leave a Reply

Your email address will not be published.