இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்!

Vinkmag ad

 

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ பயிற்சிகள்! #VikatanPhotoStory

 ச.மோகனப்பிரியா
 https://www.vikatan.com/news/health/107900-cardio-exercise-for-a-healthy-heart.html

மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயம். 24 மணி நேரமும் ஓய்வு, உறக்கம் இல்லாமல் இயங்கும் உறுப்பு. ஆனால் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.. இதயத்தைச் சீராக இயங்க வைக்க, பாதுகாக்க சில கார்டியோ பயிற்சிகள் உள்ளன. கார்டியோ பயிற்சிகளில் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஸ்டெப்பர் (Stepper), லேடார் (ladder) வகை பயிற்சிகளைப் பற்றிப் பார்க்கலாம். இந்தப் பயிற்சிகளை எல்லா வயதுக்காரர்களும் செய்யலாம்.

கார்டியோ பயிற்சிகள்

ஸ்டெப்பர் பயிற்சிகள்!

கிக் ஃப்ரன்ட் (Kick Front)

ஸ்டெப்பரில் ஏறி, நேராக நிற்க வேண்டும். வலது காலை, எட்டி உதைப்பதுபோல் நேராக நீட்ட வேண்டும். பின்பு, மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் இடது காலுக்கும் செய்ய வேண்டும். இப்படி 30 முறை செய்யலாம்.

கிக் ஃப்ரன்ட்

 

சைடு ரன் (Side Run)

ஸ்டெப்பரின் பக்கவாட்டில் நின்று, இடது காலை எடுத்து ஸ்டெப்பர்மீது வைத்து நேராக நிற்க வேண்டும்.  பின்பு, ஸ்டெப்பரின்மீது ஏறி இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் வேகமாக ஏறி இறங்கி பயிற்சி செய்ய வேண்டும். இதை 30 முறை செய்ய வேண்டும்.

சைடு ரன்

 

ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump & Squat)

ஸ்டெப்பரின் பின்னால், நேராக நிற்க வேண்டும். அதன்பிறகு ஸ்டெப்பரின் மீது குதித்து, பாதி அமர்ந்த நிலையில் நிற்க வேண்டும். பின்பு, மீண்டும் பின்னோக்கி குதித்து பழைய நிலைக்கு வர வேண்டும். இப்படி 30 முறை செய்ய வேண்டும்.

ஜம்ப் அண்ட் ஸ்குவாட்

ஸ்டெப்பர் பயிற்சி பலன்கள்

இதயத் துடிப்பு சீராகும்.

கொழுப்பைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும். ஹார்மோன்கள் சீராக இயங்க உதவும்.

 

லேடர் பயிற்சி

ஜம்ப்பிங் அண்ட் ரன்னிங் (Jumping & Running)

தரையில் கயிற்றால் ஆன ஏணியை விரித்து அல்லது தரையில் ஏணி போல் வரைந்து, கட்டத்துக்குள் நேராக நிற்க வேண்டும். இடைவெளிகளுக்குள் கால்களின் முட்டிகளை நன்கு உயர்த்தி நேராக குதித்து ஓட வேண்டும். இதேபோல், தொடர்ந்து பத்து நிமிடங்கள் ஓட வேண்டும்.

ஜம்ப்பிங் அண்ட் ரன்னிங்

 

ஜம்ப்பிங் ஜாக் (Jumping Jack)

தரையில் கயிற்று ஏணியை விரித்து, அதன் மீது நேராக நிற்க வேண்டும். பிறகு அந்த ஏணிகளின் இடைவெளியில் நேராக குதிக்க வேண்டும். இரண்டு கால்களும் கட்டத்துக்கு உள்ளே இருக்க வேண்டும். இப்போது குதித்தபடி கால்களை கட்டத்துக்கு வெளியே வைக்க வேண்டும். இப்படி மாற்றி மாற்றி குதித்து முன்னேற வேண்டும். இதேபோல் 15 முறை செய்ய வேண்டும்.

ஜம்ப்பிங் ஜாக்

 

ஹாபிள் (Hobble)

கட்டத்துக்குள், ஒரு காலை உயர்த்தியடியே குதித்துச் செல்ல வேண்டும். இரண்டு கால்களுக்கும் தலா 15 முறை செய்ய வேண்டும்.

ஹாபிள்

சைடு ரன் (Side Run)

கயிற்று ஏணியின் மீது பக்கவாட்டில் செல்லும்படி நேராக நிற்க வேண்டும். பிறகு, பக்கவாட்டில் கட்டங்களுக்கு இடையே தாவியபடி  இடமிருந்து வலமாக ஓட வேண்டும். இதேபோல், வலமிருந்து இடமாக ஓட வேண்டும். இதேபோல் 15 முறை ஓட வேண்டும்.

சைடு ரன்

லேடர் பயிற்சி பலன்கள்

இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

புதிய ரத்த நுண் குழாய்கள் (Blood capillaries) உருவாகும்.

சுவாசம் சீராகும். ஆற்றலை அதிகரிக்கும்.

மூளை மற்றும் முதுகுத்தண்டுவட இணைப்பைப் பலப்படுத்தும்.

News

Read Previous

நாயகம் எங்கள் தாயகம்

Read Next

குழந்தைகளும் வாசிப்பும்

Leave a Reply

Your email address will not be published.