அதிக தண்ணீர் குடித்தால் ……………..

Vinkmag ad

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, பட்டினி போன்றவை மூலம் உடலை வருத்தி கொள்கின்றனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார துறை பேராசிரியர் சூசன் செப் தலைமையிலான நிபுணர்கள் உடல் பருமனை தடுப்பது குறித்து பலவித ஆய்வுகள் மேற் கொண்டனர். அதன்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அதிக அளவில் குடிநீர் வழங்க வேண்டும்.

இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்பருமன் ஆவதை தடுக்க முடியும். மேலும் சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று பேராசிரியர் சூசன் செப் தெரிவித்துள்ளார். இந்த மிகவும் எளிமையான அறிவுரையை குழந்தைகளுக்கு பெற்றோர் தெரிவிக்கலாம். இதன் மூலம் உடல் பருமன் ஏற்படுவதை குழந்தை பருவத்தில் இருந்தே தடுக்க முடியும்.

News

Read Previous

எதில் மகிழ்ச்சி!!!

Read Next

கூட்டுறவு சங்கங்களுக்கு புனரமைப்பு நிதிவழங்கக் கோரி தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published.