ரயில் பயணிகள் அவசர உதவிக்கு புதிய தொலைபேசி எண்கள்

Vinkmag ad

ரயில் பயணிகளின் அவசர உதவிக்கென அழைப்பதற்காக, புதிய செல்போன் எண்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஓடும் ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ பயணிகள் தங்களுக்கும் தங்களின் உடமைகளுக்கும் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், உடனே ரயில்வே பாதுகாப்புப் படை எண்களான  80561-62724 (மதுரை), 90031-61710 (சென்னை) மற்றும் ரயில்வே போலீஸ் எண் 99625-00500 ஆகியவற்றுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த எண்கள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கும். ரயில்கள் நேரம், முன்பதிவு நிலவரம், பிஎன்ஆர் விசாரணை ஆகியவற்றுக்கு, இந்த எண்களில் உதவி பெற இயலாது. அதற்கு, பொதுவான விசாரணை எண் 139-ஐ பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இத்தகவல், மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே. ரஸ்தோகி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

Read Previous

செம்பொன்குடியில் “அம்மா’ திட்ட முகாம்

Read Next

சுகாதாரத்திற்கு ஒரு ‘சுன்னத்து’

Leave a Reply

Your email address will not be published.