மே 12 செவிலியர் தினம்

Vinkmag ad

seviliarமே 12 செவிலியர் தினம்
————————————–

கைவிளக்கேந்திய காரிகை

போரினால் புண்பட்டவர்களுக்கு
புனிதப் பணியாற்றி
மருத்துவ துறையில்
செவிலியத்தின்
மகத்துவத்தை
உலகில் ஓங்கி
தழைக்கச் செய்து
பிணியாளர் சேவை
இறைவன் சேவையென்ற
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின்
பிறந்தநாளை
செவிலியர் தினமாக
கொண்டாடும்
உலக செவிலியர்களே…

பிளாரன்ஸ் அவர்களின் வழித்தோன்றல்களான
நாம் பிறந்த வீடு
தாய் வீடாக இருக்கலாம்
நம் புகுந்த வீடு
மருத்துவமனை

பிணியாளி
நோயாளி அல்ல நம்
சொந்தம்

புகுந்த வீட்டில்
புகழ் பெற்று
பிறந்த வீட்டின்
பெருமை
காப்போம்.

செவியத்தால்
நாம் உயர்வதைவிட
செவிலியத்தை
உயர்த்த
ஒன்றிணைந்து
செயல்படுவோம்.

உலக செவிலியர்களின்
உறுதிமொழியான

“நான் இந்த அவையில்
இறைவன் முன்னிலையில்
எனது வாழ்க்கையை தூய்மையாகவும்
எனது தொழிலை அர்ப்பணிப்புடனும்
நடத்தி செயல்படுவேன் என
உறுதி எடுக்கிறேன்

எனக்கோ எனது செவிலிய பெயருக்கோ
களங்கம் விளைவிக்கும்
அனைத்து செயல்களில் இருந்தும்
நான் விலகி இருப்பேன்

பிணியாளர்களுக்கு எந்தவிதமான
கெடுதலையும் விளைவிக்கக் கூடிய
மருந்தினை கொடுக்கவோ
அல்லது நான் எடுக்கவோ மாட்டேன்

எனது சக்திக்கு உட்பட்டு
எனது செவிலிய பணியின் தரத்தை
நிலைக்க செய்யவும்
அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்
நான் பாடுபடுவேன்

நான் பணியில் இருக்கும் பொழுது
எனக்கு தெரிய வருகிற பிணியாளர்களின்
தனிப்பட்ட மற்றும் குடும்பம்
சம்பந்தப்பட்ட செய்தியின்
இரகசியத்தை காப்பேன்

எனது முழு மனதுடன்
மருத்துவர் நோயாளிக்கு செய்யும் பணிகளில்
அவருக்கு உதவியாக இருப்பதுடன்

என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிணியாளரின்
நலனுக்காக நான் பாடுபடுவேன்
என்ற உறுதிமொழியை
நினைவு கூர்ந்து
அன்பு கருணை
பண்பு பரிவு
இரக்கம் ஈகை
ஆகியவற்றை
உள்ளடக்கிய
புனிதப் பணியான
செவிலியர் பணியாற்றி வரும்
உலகெங்கும் வாழும்
செவிலியர்களுக்கு
செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…

பா.திருநாகலிங்க
பாண்டியன்
M.sc ( Nursing)

செவிலிய ஆசிரியர்

மதுரை மருத்துவ கல்லூரி

மதுரை.

News

Read Previous

புகையில்லாத கிராமம்

Read Next

அன்னையர் தினம் மே 13

Leave a Reply

Your email address will not be published.