எஸ்.பி.ஐ.,அதிரடி – கணக்கு முடிக்க : ரூ.575 கட்டணம்

Vinkmag ad
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ள, 575 ரூபாய் அபராதம்வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சிஅடைய வைத்து உள்ளது.  பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை சமீபத்தில் உயர்த்தியது.இதன்படி, மாநகரங்களில், 5,000; நகரங்களில், 3,000; சிறிய நகரங்களில், 2,000, கிராமங்களில், 1,000 ரூபாய் என, இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறையும்பட்சத்தில், தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படவுள்ளது.இதனால், இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர், தங்கள் வங்கிக் கணக்கை மூட விரும்புகின்றனர். இதற்காக, வங்கியை அணுகினால், 575 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல், நடப்புக் கணக்கை மூடுவதாக இருந்தால், 1,000 ரூபாய்க்கு மேல், கட்டணம் செலுத்த வேண்டும். இது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒரு மாணவி, சில ஆண்டுகளுக்கு முன், 500 ரூபாய் செலுத்தி இருந்தார். அந்த கணக்கை அவர் முடிக்க வந்த போது, அபராதத் தொகையை கழித்து விட்டு, 20 ரூபாய் மட்டும் கொடுத்த போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது’ என்றார்.

News

Read Previous

24X 7 – ஒளிபரப்புகளின் பின்னியங்கும் நுட்பமான அரசியல்

Read Next

பாடுவேன், ஊதுவேன்!

Leave a Reply

Your email address will not be published.