4 நாள் கல்வெட்டுப் படிப்புப் பயிற்சி – தஞ்சாவூர்

Vinkmag ad

4 நாள் கல்வெட்டுப் படிப்புப் பயிற்சி – தஞ்சாவூர்

 

தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சை

4 நாள் கல்வெட்டுப் படிப்புப்  பயிற்சி

ஆடி 5-8, 2048 / சூலை 18 – 21

கங்கை கொண்ட சோழபுரம்

                                                                

இவ்வாண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் 2017 ஆம் ஆண்டு கல்வெட்டுக்       கருத்தரங்கம் ஆடி9&10, 2048 / சூலை 22,23 நாள்களில் நடைபெறுகின்றன. அதற்கு முன் அதே இடத்தில் வல்லுநர்களால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் | ஆசிரியர் | மாணாக்கர் | ஆர்வலர்| இவ்வரிய வாய்ப்பினைப்   பயன் கொண்டு தங்களின் சாதனை/பணி நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.

சான்றிதழ் வழங்கப்படும்.  போட்டியாகவும் இருந்து பரிசுகளும் வழங்கப்படும். பயிற்சி பெறும் மாணவர்  கொள்ளளவு அதிகப்படியாக 50 வரைதான் இருக்குமாதலால் பயிற்சி விழைவோர்  முன்னதாகப் பதிவு செய்து கொள்க.

பதிவு கடை நாள்:  சூலை 12

பயிற்சி வகுப்பு:
தலைமை:  கல்வெட்டு அறிஞர் முனைவர் சு. இராசகோபால்
கல்வெட்டு அறிஞர்களான
பேராசிரியர் எ.சுப்பராயலு,
பேராசிரியர் இல.தியாகராசன்,
முனைவர் சொ.சாந்தலிங்கம்
பேராசிரியர் சு. இராசவேலு
 கல்வெட்டுப்பயிற்சி நடைபெறும் இடம் – கங்கைகொண்ட சோழபுரம்
நாள் – ஆடி 5-8, 2048 / சூலை 18 முதல் 21 வரை :
காலை 10.00 முதல் 5.00 வரை
உணவு இடைவேளை :  பிற்பகல் 1.00 -2-00
ஆர்வலர்களுக்கு அகவை வரம்பு இல்லை: (4 நாட்கள் தங்குவதற்கும் உணவிற்கும்  எழுதுபொருளுக்கும் கட்டணம்  ரூ.600/- தங்கும் வசதி- பொது மண்டபம்)
உள்ளூர் கல்லூரி மாணவ/மாணவியர்களுக்குக் கட்டணம் ஏதும் இல்லை.

தொடர்பு :

முனைவர் சு. இராசவேலு 9444261503  

அல்லது

பொறிஞர் கோமகன் 9443949692

அல்லது

திரு. செல்வராசு 8438471319

 

 அன்புடன்

சு.இராசவேலு, தொல்லியல் கழகச் செயலர்

பொறிஞர் கோமகன், உள்ளூர்ச்செயலர்

News

Read Previous

நூல் மதிப்புரை

Read Next

இயற்கையோடு நாம் 2017

Leave a Reply

Your email address will not be published.