மார்ச் 5இல் அழகர்கோவிலில் தெப்பத் திருவிழா

Vinkmag ad

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயில் தெப்பத் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி பெளர்ணமி நாளில் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, முதல் நாளான 4ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறுகிறது. 5 ஆம் தேதி

சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக பல்லக்கில் எழுந்தருளி, காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கோயிலில் இருந்து தெப்பத்துக்கு புறப்படுகிறார்.

வழிநெடுகிலும் உள்ள மண்டகப் படிகளில் சுவாமி எழுந்தருளி, மண்டுக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தை அடைகிறார். அங்கு, பிற்பகல் 12.30 மணிக்கு மேல் 1.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் மேளதாளம் முழங்க, தீவட்டி பாõவாரங்களுடன் தெப்பகுளக்கரையைச் சுற்றி வந்து, கிழக்குர் புறம் உள்ள திருக்கண் மண்டபத்தில் தேவியர்களுடன் எழுந்தருள்கிறார்.

அப்போது, பக்தர்கள் சிறப்புப் பூஜைகள் செய்து, சுவாமியை வழிபடுவர். பின்னர், மாலையில் வாணவேடிக்கையுடன் சுவாமி கோயிலை வந்தடைவார்.

இந்தாண்டு தெப்பத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால், குளக்கரையை மட்டும் சுவாமி சுற்றி வரும் வைபவம் நடைபெறும். இத்துடன் தெப்பத் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, தக்கார் வி.ஆர். வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி தா. வரதராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

News

Read Previous

தானிய உணவுகள் !

Read Next

குடியம் குகை – ஆவணப் படம்

Leave a Reply

Your email address will not be published.