தமிழ் ஸ்டுடியோ – நீர்க்குடம் ஆவணப்படம் திரையிடல்

Vinkmag ad

தமிழ் ஸ்டுடியோ – நீர்க்குடம் ஆவணப்படம் திரையிடல்

இயக்கம்: தவமுதல்வன்
நாள்: 05.05.2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு.
 
சிறப்பு விருந்தினர்கள்:
 
இயக்குனர் மீரா கதிரவன்.
இதழியலாளர் கவிதா முரளிதரன்
எழுத்தாளர் தமிழ்மகன்
மருத்துவர் மகேஷ்வரன் நாச்சிமுத்து
 
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு,  வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை குறும்பட வட்டம் நடத்துகிறது. இதில் குறும்படங்கள் அல்லது ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விவாதமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் நீர்க்குடம் ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
நீலகிரி மாவட்ட மலைகளை பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் தகவல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இயற்கை அழிவுகளை வரலாற்று
ஆய்வாக பதிவு செய்திருக்கிறார்கள். மிக முக்கியமான ஆவணப்படம். அவசியம் சனிக்கிழமை பியூர் சினிமா வந்துவிடுங்கள். 50 பார்வையாளர்கள்தான்
உட்கார்ந்து படம் பார்க்க முடியும். எனவே முதலிலாவதாக வருபவர்களுக்கு இடம் கிடைக்கும். 04.30-க்கே வந்துவிடுங்கள். இனி ஓவ்வொரு மாதமும் முதல்
சனிக்கிழமையில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் குறும்படங்கள் அல்லது ஆவணப்படங்கள் திரையிடப்படும். அனுமதி இலவசம்.
தேயிலை விலை வீழ்ச்சியடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக சூழலியலுக்கு ஆபத்தாக எழுந்துள்ள சதுப்பு நில அழிவு, நீர் நிலைகள் அழிவு,
கட்டிடமயமாகும் நீலகிரி மலைகள் பற்றிய ஓர் சூழலியல் ஆவணப்படம்.

News

Read Previous

தமிழகம் தழுவிய மாபெரும் புனித திருக்குர்ஆன் கிராத் போட்டி மற்றும்_விருது_2018

Read Next

வினவுப்பாட்டு

Leave a Reply

Your email address will not be published.