மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

Vinkmag ad

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

அன்புள்ள தம்பி தங்கைகளுக்கு,
வணக்கம்.

“எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்!

விளக்கம் இதோ:
நம் நாட்டு விடுதலை மூலம் உலகிற்கே அகிம்சைப் பாடம் நடத்திய அண்ணல் காந்தியை நம்மில் ஊறியிருந்த வன்முறை உணர்வுகளுக்கு நாமே பலியாக்கினோம். எனினும் அகிம்சைக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அது அமைந்தது அல்லவா?

அகிம்சைக்கு மேலும் வலுவூட்ட அகிலத்தையே ஆன்ம சக்தியால் நிரப்ப வேண்டிய அகிம்சைப் பணியாளர்களாய் நாம் ஒவ்வொருவரும் இன்று பரிணமிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

‘உங்களுக்குள் பொங்கித் ததும்பும் அகிம்சைச் சக்தியின் மூலம் உங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை சுயக்கட்டுப்பாடு, சுயச்சார்புடன் எவ்வாறு அமைதியாகத் தீர்த்துக் கொள்கிறீர்கள்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, வரும் ஜனவரி 20-ந்தேதிக்குள் எமக்குக் கிடைக்குமாறு தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்புங்கள்.

வயது வரம்பு: 10 முதல் 25 வயது வரை உள்ள மாணவர் அல்லது மாணவர் அல்லாதோர்.

கட்டுரையாளர் தமது பெயர், வயது, படிப்பு அல்லது பணி, தபால் முகவரி, செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் விபரங்களைத் தெளிவாகத் தரவேண்டும்.

சிறந்த நூறு கட்டுரையாளர்களுக்கு பரிசு நூல்ப்பெட்டி காந்தி நினைவு தினமான ஜனவரி 30க்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கப்படும்.

கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி: செயலர், காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018. மின்னஞ்சல்: kulandhaisamy.gpf@gmail.com

News

Read Previous

தொற்றுகளும் தொல்லைகளும்

Read Next

கல்வி உதவித்தொகை

Leave a Reply

Your email address will not be published.