பழநி புதிய மாவட்டம் விரைவில் அறிவிப்பு!

Vinkmag ad

பழநி புதிய மாவட்டம் விரைவில் அறிவிப்பு!

பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு, நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரிலேயே வெளியாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது.

அதற்கடுத்து, திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்கள் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், உடுமலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து, பழநியை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி, தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டூர், எடப்பாடி, ஈரோடு மாவட்டத்திலிருந்து அந்தியூர், தர்மபுரி மாவட்டத்திலிருந்து பென்னாகரம் தொகுதிகளை உள்ளடக்கி, மேட்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தை தலைமையிடமாக்கி புதிய மாவட்டம் உருவாக்கும்படி பா.ம.க., வலியுறுத்தி வருகிறது. புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாகவும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தில், ஒன்று அல்லது இரண்டு புதிய மாவட்டங் களுக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

News

Read Previous

அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண்

Read Next

இறைவனிடம் கையேந்துங்கள்

Leave a Reply

Your email address will not be published.