அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண்

Vinkmag ad

அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண்

துபாய் :

அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண்

துபாய் :

ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் 

விசா கல்வியாளர்கள்,மருத்துவர்கள், முதலீட்டார்கள்,

சினிமா கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை 

படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்சமயம் இந்த விசா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சார்ந்த  

ஃபஜிலா ஆசாத்-க்கு இலக்கியத்திற்காக கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெறும் முதல் 

தமிழராகவும், இந்தியாவில் மூன்றாவது நபராகவும் இவர் 

சிறப்பு பெறுகிறார்.

இவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கட்டுரைகளையும் 

தற்கொலைகள் தீர்வு அல்ல என்கிற கட்டுரையும் எழுதி உள்ளார்  .

மேலும் சர்வதேச அளவில் சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை

உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இவர் அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் 

இந்திய நலப் பேரவையின் மகளிர் அணி பொறுப்பாளராகவும்

சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.

கோல்டன் விசா பெற்ற ஃபஜிலா ஆசாத்துக்கு பல்வேறு

அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட

சமூக ஆர்வலர்கள் பலர் வாழ்த்துக்களை

தெரிவித்து வருகின்றனர்.

News

Read Previous

பேரீத்தம் பழத்தின் மருத்துவ குணங்கள்

Read Next

பழநி புதிய மாவட்டம் விரைவில் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published.