படைப்பு இலக்கிய விருது – 2024

Vinkmag ad

படைப்பு இலக்கிய விருது – 2024
~~

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்…

நூல் வெளியிட்ட படைப்பாளிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படைப்பின் இலக்கிய விருது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் தமிழில் நூல் வெளியிட்டு சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவித்து வருகிறது படைப்புக் குழுமம். அதனடிப்படையில் கடந்தாண்டுகளில் நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவித்து அந்தாண்டின் சிறந்த படைப்பாகவும் / படைப்பாளியாகவும் தேர்வு செய்து அவர்களை நம் ஆண்டு விழாக்களில் வைத்து சிறப்பித்தோம். அதே போல இந்தாண்டும் (2023 ஆண்டு) நூல் வெளியிட்ட படைப்பாளிகளை கவுரவிக்க காத்திருக்கிறது படைப்பு குழுமம்.

தயவு செய்து முழுதும் கவனமாக படித்து விட்டு பிறகு சந்தேகங்கள் இருப்பின் தகவல்(கமெண்ட்ஸ்) பகுதியில் கேக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு பதில் தரப்படும்.

இது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்கும்.

முழு விவரங்கள் அறிய https://padaippu.com/announcement/47
என்ற படைப்பு இணையதள லிங்கை சொடுக்கி தெரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

அடுத்தடுத்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள படைப்பு மேடை பக்கத்தை பின்தொடரவும்.

குறிப்பு:
படைப்பு பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட நூல்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்க மாட்டாது. படைப்பில் வெளியிடாத நூல்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு விருது வழங்கப்படும்.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

படைப்புஇலக்கியவிருது

News

Read Previous

காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம்

Read Next

இலக்கணப் போலி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published.